மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் சுகாதார உதவியாளர் தொழில்சங்கம் அங்குரார்ப்பணம்

(பத்மா)

சுகாதார அமைச்சர் ராஜித சேனாரட்ண தலைமைத்துவத்தின் கீழ் பாராளுமன்ற உறுப்பினர் சத்துர சேனாரட்ண வழிகாட்டலின் கீழ் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் ஜனநாயக சேவைகள் சார்ந்த சுகாதார உதவியாளர் தொழில்சங்கம் அங்குரார்ப்பணம் செய்து வைக்கப்பட்டுள்ளது. அமைச்சின் பிரத்தியேக செயலாளரும், தொழிற்சங்கத்தின் செயலாளருமாகிய சோமரெட்ண அவர்கள் இச்சங்கத்தினை வைபவ ரீதியாக ஆரம்பித்து வைத்தார். இச்சங்கத்தின் தலைவர் பு.திருமால் உட்பட உறுப்பினர்கள் ஒன்றாக நிற்பதை படத்தில் காணலாம்.