மட்டக்களப்பு மாவட்ட அனர்த்த முகாமைத்துவ ஒருங்கிணைப்புக்குழுக் கூட்டம்.

(துறையூர் தாஸன்)

மட்டக்களப்பு மாவட்ட அனர்த்த முகாமைத்துவ ஒருங்கிணைப்புக்குழுக் கூட்டம் இணைத் தலைவரும் மாவட்ட செயலாளருமான மா.உதயகுமார் தலைமையிலும் மேலதிக அரசாங்க அதிபர் திருமதி எஸ்.ஸ்ரீகாந்,திட்டமிடல் பணிப்பாளர் ஆர்.நெடுஞ்செழியன், முதன்மை கணக்காளர் எஸ்.நேசராஜா, உதவி அரச அதிபர் ஏ.நாவேஸ்வரன், உதவி திட்டமிடல் பணிப்பாளர் ஏ.சுதர்ஷன், மாவட்ட அனர்த்த முகாமைத்துவ நிலைய உதவிப் பணிப்பாளர் எம்.ஏ.சீ.எம்.றீயாஸ் ஆகிய குழு உறுப்பினர்களுடனும் செயலக மாநாட்டு மண்டபத்தில் நேற்று மாலை(06) இடம்பெற்றது.

தற்போதைய கிழக்கிலுள்ள பருவ கால சூழ்நிலை, மாவட்ட, பிரதேச  செயலக, கிராம மற்றும் நிறுவனங்கள் ரீதியாக காலநிலைக்கேற்ப ஆயத்தமாகயிருத்தல் மற்றும் முன் ஏற்பாடுகள், ஆரம்பத்திலேயே மக்களை முன்னெச்சரிக்கையாக  இருக்க வழிப்படுத்தல், பகுதி பகுதியாக உதவியளித்தல், மக்கள் புனர்வாழ்வு போன்ற விடயங்கள் மட்டு அரசாங்க அதிபரால், மாவட்ட நிறுவனங்களின் உயரதிகாரிகளுடன் கலந்துரையாடப்பட்டு, அதிகாரிகள் தங்களுக்கான பொறுப்புக்களையும் பணிகளையும் இதன் போது உறுதிப்படுத்தி ஏற்றுக்கொண்டனர்.

கடற்றொழில், உள்ளூராட்சி, பிராந்திய சுகாதார பணிமனை, வீதி அபிவிருத்தி, வலயக்கல்வி, எரிபொருள் கூட்டுத்தாபனம், வர்த்தக சங்கம், மின்சார சபை, ரெலிகோம், போக்குவரத்து சபை, நீர்ப்பாசனம், விவசாயம், அரச சார்பற்ற நிறுவனங்கள் ஆகியவற்றின் திணைக்கள மற்றும் அதிகார சபையின் பணிப்பாளர்கள் முகாமையாளர்கள் இதில் கலந்துகொண்டனர்.