முஸ்லீம் அரசியல் வாதிகளின் தொந்தரவுக்கு பதிலடி கொடுப்பதற்காக களத்தில் இறங்கியுள்ளோம்

(விஜயரெத்தினம்)
கிழக்கு தமிழர்களின் முதுகில் மாற்று இனத்தவர்கள் ஏறி சாவாரி செய்யலாம் என்று பகல்கனவு காணமுடியாது.கிழக்கு தமிழர்களின் முதுகில் ஏறி சவாரி செய்வதை தடுப்பதற்கும்,தமிழர்களின் காணிகளை அபகரிப்பதை தடுத்து நிறுத்துவதற்கும், முஸ்லீம் அரசியல் வாதிகளின் தொந்தரவுக்கு பதிலடி கொடுப்பதற்காகவும், களத்தில் இறங்கியுள்ளோம்- கருணா அம்மான் எனத்தெரிவித்தார்.

தமிழ் தேசிய கூட்டமைப்பு பாராளுமன்றத்தில் அரசுக்கு அருவருடிகளாக இருந்து கொண்டு எதுவித பலனையும் மக்களுக்கு பெற்றுக் கொடுக்க முடியாத நிலைக்கு இன்று தள்ளப்பட்டுள்ளனர். அதேவேளை நேற்று(11.12.2017)  எமது பிரதேசத்தில் முஸ்லீம் அரசியல் வாதிகளின் தொந்தரவு நாளுக்கு நாள் அதிகரித்துள்ளது. இதற்கு பதிலடி கொடுப்பதற்காக களத்தில் இறங்கியுள்ளோம் என கருணா அம்மான் என்று அழைக்கப்படும் முன்னாள் அமைச்சர் வி. முரளீதரன் குறிப்பிட்டார். 

மட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ளுராட்சி மன்ற தேர்தலில் சுயேட்சைக் குழுவில் போட்டியிடுவதற்கான கட்டுப்பணத்தை நேற்று  திங்கட்கிழமை தேர்தல் திணைக்களத்தில் செலுத்திய பின்னர் ஊடகங்களுக்கு கருணா அம்மான் கருத்து தெரிவிக்கையில் இவ்வாறு தெரிவித்தார்.

அவர் மேலும் பேசுகையில் :- 

தமிழ் மக்களின் எதிர்கால நன்மைகளை கருத்தில் கொண்டு சிறந்த அரசியல் தலைமைத்துவத்தை தமிழர்களுக்கு வழங்கவேண்டும் என்பதற்காக தமிழர் ஜக்கிய சுதந்திர முன்னணி ஆரம்பித்து ஒருவருடம் பூர்த்தியடைந்துள்ளது. இது ஒரு தனித்துவமான அரசியல் கட்சியாக வளர்க்கவேண்டும் என்பது தான் நோக்கம்.
தமிழ் தேசிய கூட்டமைப்பு பாரிய பழைய அரசியல் கட்சியாக இருந்தாலும் தீர்மானங்களை எடுக்க முடியாமல் திணறிக் கொண்டிருக்கின்றது.பலபேர் வெளியேறுவதும் மீண்டும் சேருவதும் போன்ற அரசியல் வங்குறோத்து நிலைக்கு தள்ளப்பட்டிருக்கன்றது.
அதேபோன்று தமிழ் தேசிய கூட்டமைப்பில் வெளியேறி பல புதிய கூட்டமைப்புகள் உருவாகியள்ளது. ஆகவே இவர்கள் வெறும் சந்தர்ப்பவாத அரசியல்வாதிகள்.
தமிழ் தேசிய கூட்டமைப்பு பாராளுமன்றத்தில் அரசுக்கு அருவருடிகளாக இருந்து கொண்டு எமது மக்களுக்கு எதுவித பலனையும் கொடுக்க முடியாத நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.