எதிர்வரும் சில தினங்களில் கிழக்கு மாகாணத்தில் இடியுடன் கூடிய மழை

எதிர்வரும் சில தினங்களில் மழையுடன் கூடிய காலநிலை அதிகரிக்ககூடும் என்று வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.   
விசேடமாக மாலைவேளைகளில் இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும்.

ஊவா மற்றும் கிழக்கு மாகாணங்களில் அடிக்கடி மழை பெய்யக்கூடும். மத்திய ,சப்ரகமுவ, மேற்கு மற்றும் வடமேல் மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் ஆங்காங்கே பிற்பகல் 2.00 மணியின் பின்னர் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யும்.

நாட்டின் ஏனைய பிரதேசங்களில் மழையுடன் கூடிய காலநிலை நிலவும். நாட்டின் கிழக்கு கடற்பிரதேசத்தில் மழை பெய்யக்கூடும். நாட்டின் ஏனைய கடற்பிரதேசங்களில் இடியுடன்கூடிய மழை பெய்யக்கூடும்.

மேற்கு ,வடமேல் ,சப்ரகமுவ மற்றும் மத்திய மாகாணங்களில் சில பிரதேசங்களில் காலை வேளையில் பனிமூட்டத்துடனான காலநிலையையே எதிர்பார்க்கமுடியும்.

இடியுடன் கூடிய மழையின் போது தற்காலிகமாக கடும் காற்று வீசக்கூடும். இடிமின்னல் தொடர்பில் பொதுமக்கள் அவதானத்துடன் செயற்படவேண்டும் என்று திணைக்களம் அறிவித்துள்ளது.