கிழக்கில் 1156146 பேர் உள்ளுராட்சி தேர்தலில் வாக்களிக்கத்தகுதி பெற்றுள்ளனர்

(செ.துஜியந்தன்)

இம்முறை கிழக்கு மாகாணத்தில் உள்ளுராட்சி தேர்தலில் 11 இலட்சத்து 56 ஆயிரத்து 146 பேர் வாக்களிக்கத்தகுதி பெற்றுள்ளனர். 2017 ஆம் ஆண்டின் வாக்காளர் பட்டியலின் அடிப்படையிலே இவர்கள் தகுதி பெற்றுள்ளதாக உத்தியோக பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கிணங்க மட்டக்களப்பு மாவட்டத்தின் கல்குடா, மட்டக்களப்பு, பட்டிருப்பு ஆகிய மூன்று தொகுதிகளிலிருந்தும் 3 இலட்சத்து 89 ஆயிரத்து 582 பேர் வாக்களிக்கத்தகுதி பெற்றுள்ளனர். இம் மாவட்டத்தில் 12 உள்ளுராட்சி சபைகள் அமைந்துள்ளது.

இதேபோன்று அம்பாறை மாவட்டத்தில் 4 இலட்சத்து 93 ஆயிரத்து 742 பேர் வாக்களிக்கத் தகுதி பெற்றுள்ளனர். இங்கு அம்பாறை, சம்மாந்துறை, கல்முனை, பொத்துவில் ஆகிய தொகுதிகளுள்ளன. இவற்றில் 20 உள்ளுராட்சி மன்றங்கள் அமைந்துள்ளன.

திருகோணமலை மாவட்டத்தில் 2 இலட்சத்து 72 ஆயிரத்து 822 பேர் வாக்களிக்கத்தகுதி பெற்றுள்ளனர். இங்கு மூதூர், திருகோணமலை ஆகிய தொகுதிகளில் 11 உள்ளுராட்சி மன்றங்கள் அமைந்துள்ளன.
கிழக்கிலுள்ள 43 உள்ளுராட்சி மன்றங்களில் மூன்று மாநரசபைகளும், 5 நகரசபைகளும், 35 பிரதேச சபைகளம் உள்ளடங்குகின்றமை குறிப்பிடத்தக்கது.