கிராம உத்தியோகத்தர்களின் எல்லைகளை இலகுவாகக் கண்டறிய புதுவழி!

இலங்கையின் அரச நில அளவையாளர் திணைக்களம் நாட்டிலுள்ள அனைத்து கிராம உத்தியோகஸ்தர் பிரிவுகளின் எல்லைகளை குறிக்கும் வரைபடம் ஒன்றைத் தயாரித்துள்ளதாக தகவல் கிடைத்துள்ளது.
14018 கிராம உத்தியோகஸ்தர் பிரிவுகளின் எல்லைகளைக் கொண்ட இந்த வரைபடம், பிரதேச செயலாளர்கள் மற்றும் கிராம உத்தியோகஸ்தர்களின் ஒத்துழைப்புடன் வரையப்பட்டுள்ளது. இந்த வரைபடம் அரச நில அளவையாளர் திணைக்களத்தின் www.survey.gov.lk எனும் இணையதளத்தில் இடம்பெற்றுள்ளது.
இதனால் தேவைப்படும் எவராலும் தமது கிராம உத்தியோகஸ்தர் பிரிவுவின் கிராமம் வீதி முதவானவற்றின் விபரங்களை அறிந்துகொள்ள முடியும் என்று நில அளவையாளர் பீ.எம்.பீ.உதயகாந்த தெரிவித்தார்.