இலங்கையில் அதிகூடிய இலாப் பகிர்வை வாடிக்கையானர்களுக்கு வழங்கும் நிறுவனம் ஸ்ரீலங்கா காப்புறுதியே. விற்பனை முகாமையாளர் புவனேந்திரன்

( ரவிப்ரியா )
இலங்கையில் இயங்கும் காப்புறுதி நிறுவனங்களில் வருடாவருடம் அதி கூடிய இலாபப் பகிர்வை வழங்கும் ஒரே நிறுவனம் இலங்கை காப்புறுதியே. அதற்கு எந்த காப்புறுதி நிறுவனமும் எமக்கு சவால் விடுக்க முடியாது.
இத்தொகையானது வருடா வருடம் அதிகரித்து உயர்மட்டத்திற்கு செல்கிறதே தவிர கீழ் மட்டத்திற்கு வருவதேயில்லை. எனவே எமது காப்புறுதி நிறவனமே வாடிக்கையாளர்களை தங்கள் பங்காளிகள் என்ற மனப்பாஙகுடன் கௌரவப்படுத்தும் பங்களிப்புக்களைச் செய்து வருகின்றது.

மேற்கண்டவாறு புத்தாண்டு விற்பனையை சம்பிரதாயபூர்வமாக ஆரம்பித்து வைக்கும் நிகழ்வில் வாடிக்கையாளர்கள் மற்றும் கள உத்தியோகத்தர்கள் மத்தியில் உரையாற்றுகையில் மட்டக்களப்பு மாவட்ட விற்பனை முகாமையாளர் பி.புவனேந்திரன் தெரிவித்தார். அவர் தொடர்ந்து பேசுகையில்.

நாம் காப்புறுதியை மக்களுக்கு செய்யும் சேவையாகவும் தொண்டாகவுமே செய்து வருகின்றோம். ஒரு உயிர் குடும்பத்தில் இருந்து பிரியும்போது எமது மாவட்டத்தில் அந்தக்குடும்பம் பொருளாதார பலமின்றி தவிப்பதை நாம் அன்றாடம் காண்கின்றோம்.

அந்த நிலை சமூகத்திற்கு தொடர்ந்து ஏற்படக் கூடாதென்பதற்காகவே நாம் களத்தில் இறங்கி சமூக நோக்கோடு எமது சேவையைச் செய்து வருகின்றோம். எவரும் பொருளாதார அனாதைகளாக தெருவில் நின்றுவிடக் கூடாது என்பதில் மிகுந்த கவனமெடுத்து அக்கறையோடு செயற்பட்டுக் கொண்டிருக்கின்றோம்.

எந்த விதவைப் பெண்ணும் அளவுக்கதிகாமான குடும்ப பாரத்தைச் சுமக்கக் கூடாது என்பது எமது குறிக்கோளாக இருக்கின்றதது. அதற்கு மாற்றீடான ஒரேவழி முற்கூட்டியே காப்புறுதியைப் பெற்றுக் கொள்வதே என்பதை அறிவுறுத்தி வருகின்றோம்.

எமது காப்புறுதி நிறுவனம் இலாபத்தை அப்படியே சுவீகரித்துக் கொள்வதில்லை என்பது ஒரு முக்கி விடயமாகும். வாடிக்கையாளர்களுக்கு போனஸ் ஆக ஒரு பகுதியை வழங்குகின்றது.

இன்னொரு பகுதியை நாட்டின் அத்தியாவசிய சுகாதாரம், விளையாட்டு வீதி அபிவிருத்தி மற்றும் அத்தியாவசிய தேவைகளுக்காக அரசுக்கும் வழங்குகின்றது. எனவே எமது கம்பனி நாட்டுக்கும் நாட்டு மக்களுக்கும் தன்னால் முடிந்ததை முழுமையாகச் செய்து கொண்டே இருக்கின்றது.

எனவே இத்தகைய சிறப்பியல்புகளைக் கொண்ட எமது நிறவன வளர்ச்சிக்கு எமது உத்தியோகத்தர்களும். பெறுமதிமிக்க வாடிக்கையாளர்களும் தொடர்ந்து ஒத்துழைக்க வேண்டுமெனக் கேட்டுக் கொண்டார்.

இந்நிகழ்வில் வாடிக்கையாளர்கள் கிழக்கு மாகாண விற்பனை முகாமையாளர்  பிராந்திய நிருவாக உத்தியோகத்தர் திருமதி பா.கருணாகரன். மற்றும் உத்தியோகத்தர்கள் அமைப்பாளர்கள், காப்புறுதி ஆலோசகர்கள் என பலரும் கலந்து கொண்டு இவ்வாண்டிற்கான விற்பனையை மகிழ்வுடன்  ஆரம்பித்து வைத்தனர்.