கிழக்குப் பல்கலைக்கழகத்தில் கவனயீர்ப்பு போராட்டம்.

(எம்.ஐ.சர்ஜூன்)

கிழக்குப் பல்கலைக்கழக கல்விசாரா ஊழியர்கள் முன்னெடுத்த கவனயீர்ப்பு போராட்டம் இன்று புதன்கிழமை வந்தாறுமூலையில் அமைந்துள்ள கிழக்குப் பல்கலைக்கழக பிரதான வளாக முன்றலில் நடைபெற்றது.

பல்கலைக்கழக கல்விசாரா ஊழியர்களின் பிரச்சினைகளை தீர்த்து வைப்பது சம்பந்தமாக பல்கலைக்கழக மாணியங்கள் ஆணைக்குழுவினால் உடன்பாடு காணப்பட்ட சில விடயங்கள் உரிய முறையில்நடைமுறைப்படுத்தப்படாமையை சுட்டிக்காட்டி இது முன்னெடுக்கப்பட்டிருந்தது.

மாதாந்த ஊக்குவிப்பு கொடுப்பனவை அதிகரிப்பது சம்பந்தமான சுற்றுநிருபத்தை வெளியிடாமை, ஒரு சாராருக்கு மாத்திரம் வழங்கப்பட்டிருக்கும் கொடுப்பணவு இதுவரையிலும் கல்விசாரா ஊழியர்களுக்கு வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்படாமை, பல்கலைக்கழக ஊழியர்களுக்கு வைத்திய காப்புறுதி திட்டம், ஓய்வூதிய திட்மொன்றை அமைப்பதற்கான செயல்திட்டமொன்றை இதுவரையிலும் முன்னெடுக்காமை உட்பட ஆறு முக்கிய அம்சங்களை உள்ளடக்கிய கோரிக்கைகளை முன்வைத்து இந்தப் போராட்டம் நடைபெற்றது.

'பல்கலைக்கழக தொழிற்சங்கங்களின் ஒன்றிணைந்த குழக்களின் அனுசரனையில் இன்று நாடாளாவிய ரீதியில் அனைத்துப் பல்கலைக்கழக ஊழியர்களும் இணைந்து மேற்கொள்ளும் இக்கவனயீர்ப்பு போராட்டத்தை கவனத்திற்கொண்டு, எமக்கு நியாமான தீர்வு கிடைக்கப்பெறாதவிடத்து எதிர்வரும் நாட்களில் நாடு தழுவிய ரீதியில் தொடர் பணிப்பகிஷ்கரிப்பு போராட்டத்தில் ஈடுபட எமது சங்கம் தயாராகி வருவதாக' கிழக்குப் பல்கலைக்கழக ஊழியர் சங்கத் தலைவர் இராஜசேகரம் கருத்துத் தெரிவித்தார்.