மட்டக்களப்பு புதூரிலும் இடம்பெற்ற மாட்டு பொங்கல் வழிபாடுகள்

(வரதன்)
இவ்வருடமும் கிழக்கு மாகாணத்தில் இன்று காலை சகல கால்நடை வளர்பாளர்களும் தங்களது இல்லங்களில் தமது கால்நடைகளுக்கு நன்றி கடனை செலுத்தும் முகமாக மாட்டு பொங்கல் வழிபாடுகள்  சிறப்பாக முன்னெடுத்தனர்.

வருடம் முழுக்க எதுவித எதிர்பார்ப்புமில்லாமல் தமக்காய் உழைக்கும் வாய் பேசாத இந்த ஜீவராசிகளுக்கு காலையில் அவர்களது இடத்தினை அலங்கரித்து நிறைகுடம் வைத்து கோலமிட்டு கால்நடைகளை குளிப்பாட்டி திலகமிட்டு பட்டு சாத்தி வணங்கி பழம் கொடுத்து பின்பு பொங்கல் பொங்கி வழிபாடுகளில் ஈடுபடுவார்கள்.

இதேவேளை இன்று மட்டக்களப்பு  புதூரிலும் 30 வருடங்களுக்கு மேல் பாற்பண்னை நாடத்தி வரும் நா.சிவப்பிரியன் என்பவரது பாற்பன்னையில் இவ் மாட்டு பொங்கல் வழிபாடுகள் சிறப்பாக இடம்பெற்றன. இவ் நிகழ்விகளில் முன்னால் கிழக்கு மாகண விவசாய அமைச்சர் கி.துரைராஜசிங்கம் பிரதம அதிதியாக கலந்து கொண்டார்