நரிப்புல் தோட்டத்தில் நிதி உதவி வழங்கிவைப்பு



ஐரோப்பா வாழ் தமிழ் மக்களின் ஆதரவுடன் மாணவர்களின் எண்ணிக்கை குறைவால் மூடப்படும் நிலையில் உள்ள பாடசாலைகளின் நிலைமை கருதி ஐந்தாவது குழந்தையினைப் பெற்றெடுத்த தாய் ஒருவருக்கு வியாழக்கிழமை 11 ஆம் திகதி உதவி வழங்கும் நிகழ்வு நரிப்புல் தோட்டத்தில்  இடம் பெற்றது.


ஐரோப்பா வாழ் தமிழ் மக்களின் ஆதரவுடன் மாணவர்களின் எண்ணிக்கை குறைவால் மூடப்படும் நிலையில் உள்ள பாடசாலைகளின் நிலமை கருதி பிரதேச தமிழ் மக்களின் பிறப்பு வீதத்தை அதிகரிக்கும் நோக்கில் முதல் கட்டமாக 16.10.2016 அன்று ம/ட் நரிபுல்தோட்டம் மகிழ்வட்டவான் ஆகிய கிராமங்களில் இரண்டு பிள்ளைகளுக்கு மேல் பெற்றெடுத்த தாய்மார்களுக்கு ஊக்குவிப்பு பணமாக தலா ரூபாய் 10000 மும் மற்றும் பிள்ளையின் பராமரிப்பு க்காக பிள்ளையின் 18 வயது வரை மாதம்தோறும் 1000 ரூபாய் வழங்கப்பட்டு வருகிறது  இத்திட்டத்தின் கீழ் மேலும் மூன்று கிராமங்களான நெல்லூர் மனிபுரம் மற்றும் பன்குடாவெளி ஆகியவை உள்வாங்கப்பட்டு தற்போது மொத்தமாக 43 தாய்மார் இத்திட்டத்தின் மூலம் உதவி பெற்று வருகிறது குறிப்பிட்ட தக்கது மற்றும் இத்திட்டத்துக்கு உதவி செய்து வரும் சுவிஸ்  யுயசயர மாநிலம் குசiஉம என்னும் இடத்தில் வசிக்கும் திருமதி பனார்ண்டோ மகள் சாரங்கி ஆகியோருடன் மண்முனை மேற்கு பிரதேசச் உதவி கல்வி அதிகாரியான திரு.ஹரிகராஜ் அவர்களும் இன்று 11.01.2018 பிரதேசத்துக்கு நேரடியாக சென்று நிலைமையை கேட்டு தெரிந்து கொண்டனர். 25.23.2017 அன்று மேலும் ஒரு தாய் தனது ஐந்தாவது குழந்தையை பெற்றெடுத்துள்ளார் அவரை ஐரோப்பிய தமிழ் மக்களின் சார்பில் வாழ்த்தியதோடு அவருக்கான ரூபாய் 10.000 பெறுமதியான காசோலையும் வழங்கி கௌரவிக்கப்பட்டார் மற்றும் இவரின் நான்காவது குழந்தை ஏற்கனவே இத்திட்டத்தின் கீழ் உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.15.12.2017 அன்று மேலும் ஒரு தாய் தனது ஐந்தாவது குழந்தையை பெற்றெடுத்துள்ளார் அவரை ஐரோப்பிய தமிழ் மக்களின் சார்பில் வாழ்த்தியதோடு அவருக்கான ரூபாய் 10.000 பெறுமதியான காசோலையும் வழங்கி கௌரவிக்கப்பட்டார் மற்றும் இவரின் நான்காவது குழந்தை ஏற்கனவே இத்திட்டத்தின் கீழ் உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது