அரச இரத்த வங்கியில் இரத்தம் தேவைப்படுகின்றது. அதனை முன்னிட்டு இரத்த தான நிகழ்வு




(அஷ்ரப் ஏமத்)

நாட்டில் ஏற்பட்டுள்ள இரத்த தட்டுப்பாட்டை கருத்திற் கொண்டு  எதிா்வரும் ஞாயிற்றுக் கிழமை 21ஆம் திகதி தேசிய இரத்த பரிமாற்ற நிலையத்துடன் இணைந்து இரத்த தான நிகழ்வொன்றை ஏற்பாடு   செய்துள்ளதாக புற்று நோய் எதிா்ப்பு அணியின் தலைவா்(fight Cancer Team)  எம்.எஸ். முஹம்மத் தெரிிவித்தாா்.  தேசிய இரத்த பரிமாற்ற நிலையத்தின்  களஞ்சியசாலையில் இரத்த தானங்களை மேற்கொள்ள பொதுமக்கள் முன்வரவேண்டும் எனவும் தேசிய பரிமாற்ற நிலையத்தின் பணிப்பாளா் ரொஷான் பெல்லன விடுவித்த வேண்டுகோளைத் தொடா்ந்தே இந் நிகழ்வை  ஏற்பாடு செய்துள்ளதாகவும்  கொழும்பு 5  இலக்கம் 555 - 5 ஜீ எலவிட்டிக்கல மாவத்தையில் உள்ள இரத்த வங்கியில் இந் நிகழ்வு  நடைபெறும்.

  21 ஆம் திகதி காலை 08 மணி முதல்  மாலை 03 மணி வரை  இந்த இரத்த தான நிகழ்வு ந டைபெறவுள்ளது.  இது தொடா்பாக புற்று நோய் எதிா்ப்பு அணியின் தலைவா் எம். எஸ்.எச் முஹம்மத்  மேலும் தெரிவித்தாவது  இலங்கையில் ஒவ்வொரு மணித்தியாலயத்திற்கும் 120 பேருக்கும்  ஒவ்வொரு நாளும்  2880 பேருக்கும்  ஒவ்வொரு மாதமும்  86,400 பேருக்கும் இரத்தம் வழங்கப்பட வேண்டும்.

எனினும் டெங்கு  மற்றும்  வேறு நோய்கள் காரணமாக ஒவ்வொறு ஆண்டும்  ஜனவரி முதல் ஏப்ரல் வரையான காலத்தில்  இரத்த தானம் செய்யும் அளவும் குறைவானது. இந்த நிலைமையில் .இரத்த தட்டுப்பாடு  ஏற்படலாம்.  எனவே பொது மக்கள் இக்காலப்பகுதியில் தானம் மேற்கொள்ள முன்வரவேண்டும்  என்றாா்.