மொழி ஆற்றல்களை விருத்தி செய்யும் நோக்கத்துடன் பாடசாலைகளில் ஆங்கில பாடம் அறிமுகம்

மொழி ஆற்றல்களை விருத்தி செய்யும் நோக்கத்துடன் அரச பாடசாலைகளில் தரம் ஒன்று மற்றும் தரம் இரண்டுக்குரிய வகுப்புக்களில் ஆங்கில பாடத்தை அறிமுகம் செய்வதென கல்வியமைச்சு தீர்மானித்துள்ளது.

இதற்கு தேவையான பாடப் புத்தங்களை அச்சிட்டு விநியோகிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக கல்வி வெளியீட்டு ஆணையாளர் பத்மினி நாலிக்கா வெலிவத்த தெரிவித்துள்ளார்.

கல்வியமைச்சர் அகிலவிராஜ் காரியவசத்தின் எண்ணக்கருவுக்கு அமைவாக இந்தத் திட்டம் இவ்வாண்டு ஆரம்பிக்கப்படும்.இது அடுத்த வருடம் முழுமையாக அமுல்படுத்தப்படவுள்ளது.

விசேட செயற்பாடுகள் மூலம் முதலாம் இரண்டாம் வகுப்புக்களை சேர்ந்த பிள்ளைகளுக்கு ஆங்கில பாடம் போதிக்கப்படள்ளது. இதற்காக ஆசிரியர், ஆசிரியைகளுக்கு விசேட பயிற்சி வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.