மட்டு உயர் தேசிய தொழில்நுட்ப நிறுவகத்தின் 2018 ம் கல்வியாண்டில் புதிய மாணவர்களுக்கான விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளன

[NR]
மட்டக்களப்பு  ஆரையம்பதி உயர் தேசிய தொழில்நுட்ப நிறுவகத்தின் 2018 ம் கல்வியாண்டில் புதிய மாணவர்களுக்கான ஆட்சேர்ப்புக்கான  விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளன.. இதற்கமைய

01. உயர்தேசிய கணக்கியல் டிப்ளோமா (HNDA) (Degree Equal),  முழுநேரம் மற்றும் பகுதிநேரம் (Full Time & Part Time).
02. உயர்தேசிய ஆங்கில டிப்ளோமா (HNDE)  முழுநேரம் மற்றும் பகுதிநேரம் (Full Time & Part Time).
03. உயர்தேசிய தகவல் தொழில்நுட்பம் டிப்ளோமா(HNDIT) முழுநேரம் மற்றும் பகுதிநேரம்  (Full Time & Part Time)
04. உயர்தேசிய சுற்றுலா மற்றும் நலனோம்பு முகாமைத்துவம் டிப்ளோமா(HNDTHM)  முழுநேரம் மாத்திரம் (Full Time Only)



மேற்குறித்த பாடநெறிகளுக்கான விண்ணப்பங்களை  இணையத்தளத்தின் ஊடாக இலவச தரவிறக்கி பூர்த்திசெய்த விண்ணப்பங்களை மட்டக்களப்பு உயர்தொழில் நுட்ப கல்வி நிறுவன முகவரிக்கு பதிவுத் தபாலில் அனுப்பி வைக்கவும்.

விண்ணப்பங்கள் அனுப்புவதற்கான முடிவுத் திகதி 16.03.2018.

மேலும் இங்கு  மகாபொல புலைமைப்பரிசில் திட்டமும், புதிய நவீன கணணி ஆய்வு கூடமும் வசதிகளும், இலவச போக்குவரத்து வசதிக்கான பருவகால பற்றுச்சீட்டு மற்றும் மிகச்சிறந்த திறமை மிக்க விரிவுரையாளர்களை கொண்டு விரிவுரைகள் இடபெறுகின்றமையும் குறிப்பிடத்தக்கது.


விண்ணப்பங்கள் தரவிறக்க கீழே கிளிக் செய்க


குறிப்பு : முடிவுத்திகதிக்கு(16.03.2018) பின்னர் அனுப்பப்படும் விண்ணப்பங்கள் ஏற்றுக் கொள்ளப்படமாட்டாது. 


செ.ஜெயபாலன்
கல்விசார் இணைப்பாளர்
உயர்தொழில்நுட்பக் கல்வி நிறுவனம்,
பிரதான வீதி, கோவில்குளம்
ஆரயம்பதி
மட்டக்களப்பு
தொடர்புகளுக்கு 0652247519
www.atibatti.org