மகிந்தவின் வெற்றி தீர்வைத் தடுக்குமா?

(மகேஷ் சோமசுந்தரம் )

சுதந்திரத்துக்குப் பிந்திய அனைத்து பொதுத் தேர்தல்களிலும் ஜனாதிபதித் தேர்தல்களிலும் முறையே நேரடியாகவும் மறைமுகமாகவும் நியாயமான ஒரு அரசியல் தீர்விற்காகவே தமிழ் மக்கள் வாக்களித்து வருகிறார்கள். பெரும்பான்மையின மக்களும் தமிழ்பேசும் சகோதர இனத்தவரும் சட்டவாக்கத் துறையிலும் நிறைவேற்றுத்துறையிலும் பங்கேற்கும் பிரதிநிதிகளைப் பாராளுமன்றம் அனுப்புகிறார்கள். நிறைவேற்றுத்துறையில்  முஸ்லிம் பிரதிநிதிகள் கடந்த 70 வருடம் தொடர்ச்சியாகப் பங்கேற்றதன் விளைவாக வடகிழக்கில் அவர்தம் பிரதேசங்கள் கண்டிருக்கும் பௌதீக மற்றும் மனிதவள அபிவிருத்தியை தமிழ் மக்கள் நன்கறிவர்.

வறுமை பட்டினி மந்தபோசணைஇ சிறுவர் ஊழியம்இ பாடசாலை இடைவிலகல்இ பட்டதாரிகள் மற்றும் படித்த இளைஞர் வேலையின்மை எனும் கதைகள் தான் இன்று தமிழ் மக்களின் ஊடகச் செய்திகளின் பேசு பொருள். முப்பது வருட யுத்தத்தின் நேரடி விளைவுகளான காணாமலாக்கப்பட்டோர்இ யுத்தத்தில் பலியானோர்இ அரசியல் கைதிகள் இயுத்த விதவைகள்இ யுத்தம் உருவாக்கிய மாற்றுத்திறனாளிகள்இ காணி ஆக்கிரமிப்பு பற்றிய கதைகள் சர்வதேசமும் ஐ.நாவும் அறிந்த செய்திகள். இந்த சோகச் செய்திகள் தமிழர் வாழ்வில் தொடர்கதையாவதா? எந்தவொரு மனித ஜீவனும் சோகத்தை விரும்பி ஏற்பதில்லை. இதற்கு தமிழ் மக்கள் விதிவிலக்கில்லை!


தமிழ் மக்களும் தமது வாழ்வினை மேம்படுத்தும் வசதிகளைத் தரும் அபிவிருத்தியை விரும்புகிறார்கள். ஆனால் அது ஒரு நியாயமான அரசியல் தீர்வுடன் இணைந்துவர வேண்டுமென்பதே அவர்கள் இதுவரை தேர்தல்களில் சொல்லிவந்த செய்தி. ஆம்இ  கடந்த உள்ள10ராட்சித் தேர்தலிலும் தமிழ் மக்கள் இந்தச் செய்தியை மீண்டுமொருமுறை தெளிவாக சொல்லியிருக்கிறார்கள்.

கடந்த பொதுத் தேர்தலில் சமஷ்டிக்காக ஆணைபெற்ற தமிழ்தேசியக் கூட்டமைப்பு 2020 வரை தமது வாக்குறுதியை நிறைவேற்றுவதற்கான  தார்மீகப் பொறுப்பைக் கொண்டிருக்கிறது. கூட்டமைப்பினர் எதிர்காலத் தேர்தல்களில் தமிழ் மக்களிடம் செல்ல விரும்பினால் சமஷ்டித் தீர்வுக்காக இதயசுத்தியுடன்  தாம் இயன்றவரை உழைத்தார்கள் என்பதை நிரூபிக்கவேண்டிய நிர்பபந்தமும் அவர்களுக்கிருக்கும். இப்பொழுது காலம் மாறிவிட்டது. மக்கள் விழித்து விட்டனர். இதைத்தான் உள்ள10ராட்சித் தேர்தல் முடிவுகள் கோடிட்டுக் காட்டுகின்றன. கூட்டமைப்பு பெற்ற ஒப்பீட்டளவிலான அதிக வாக்குகளும் ஆசனங்களும் அக்கட்சி தீர்வுச் செயன்முறையைத் தீவிரமாகத் தொடர்வதற்கான பச்சை விளக்குச் சைகை. இதேபோல் கூட்டமைப்பின் வாக்குகளில் ஏற்பட்ட பாரிய சரிவு செல்ல வேண்டிய பாதை இடைக்கால அறிக்கையின் அரைகுறைத் தீர்வுப்பாதையல்ல எனக்காட்டும் சிவப்பு விளக்கு. எனவே  இனிப் பயணிக்க வேண்டியது தந்தை செல்வா உருவாக்கிய சமஷ்டிக்கட்சியின் பெயரில் இருக்கும் சமஷ்டிப்பாதை என்பதே மக்கள் செய்தி.

மக்கள் தமது கடமையைச் செய்து விட்டார்கள்.  இனித் தலைவர்கள் மக்களைப் பின்பற்ற வேண்டும். வெளிப்படைத் தன்மைஇ பொறுப்புக் கூறல் பற்றியெல்லாம் மக்கள்  அறிந்து வைத்திருப்பவர்கள். இதனால் தான் தலைவர்களுக்கு  ஆட்சி மாற்றங்களின் போது மக்களைப் பின்பற்ற வேண்டிய சங்கடமான நிலைமை. தலைவர்களே! பொதுத் தேர்தலில் நீங்களே உறுதியளித்த சமஷ்டித் தீர்வுக்கு உங்களை உண்மையாக அர்ப்பணியுங்கள். சமஷ்டி என்பது தேர்தல் பிரசாரத்திற்காக மட்டும் பாவித்துவிட்டு தூக்கியெறியும்  மலிவான சந்தைப் பண்டமல்ல. இது குறிப்பாக வடக்கு மக்கள் சொல்லியிருக்கும் செய்தி.


புறச் சூழல்கள் எந்நேரமும் எப்படியும் மாறலாம். சூழ்நிலை மாறும்போது இலக்கை மாற்றாமல் அணுகுமுறைகளை மாற்றுபவர்களே உண்மையான தலைவர்கள். இது எமக்கு வரலாறு கற்றுத் தந்த பாடம். மகிந்த மீண்டும் எழுந்துவிட்டார். தீர்வு தொடர்பில்  இப்போது  எதுவும் நடக்காது என்று தமிழ்ப்பேச்சாளர்களும் சில ஊடகங்களும் ஆராய்ந்து  பார்க்காமல் விடுத்திருக்கும் அவசர அறிவிப்புக்கள் சான்றுடன் கூடிய உண்மைகளா? அல்லது ஆற்றல் அனுபவம் மனப்பாங்கு போன்ற  தனிநபர்சார் காரணிகளுக்கு மாத்திரம்; மட்டுப்படுத்தப்பட்ட வெற்று ஊகங்களா? அல்லது  மக்கள் நலன்சாரா உள் நோக்கங்களின் வெளிப்பாடா?


உள்ள10ராட்சித் தேர்தலில் மகிந்த ராஜபக்ஷவின் அமோக வெற்றிக்கான காரணங்களை பட்டியல்படுத்தி தென்னிலங்கையின் சிங்கள மற்றும் ஆங்கில நாளேடுகளில்  ஆசிரியர்  தலையங்கங்கள் தீட்டப்பட்டிருக்கின்றன. திருடர்களைப் பிடிக்கப்போவதாக 2015 ஜனவரி 8இல் வழங்கிய வாக்குறுதியை நிறைவேற்றாமை மத்திய வங்கி பிணைமுறி மோசடிஇ வாழ்க்கைச் செலவு அதிகரிப்புஇ முந்திய ஆட்சியின் அபிவிருத்தித் திட்டங்கள் நிறுத்தப்பட்டமைஇ புதிய அபிவிருத்தித் திட்டங்கள் பெருமளவில் ஆரம்பிக்கப்படாமைஇ வேலைவாய்ப்பின்மை போன்ற காரணங்களால் நல்லாட்சி அரசாங்கத்தின் மீதேற்பட்ட வெறுப்பே மகிந்தவின்  அமோக வெற்றிக்கு காரணங்கள் என்கின்றன பன்னிரண்டாம் பதின்மூன்றாம் திகதி வெளிவந்த அனைத்து சிங்கள மற்றும் ஆங்கிலப் பத்திரிகையின் தலையங்கங்கள்.

புலிகளின் தற்கொலைப்படைத் தாக்குதலால் மத்திய வங்கிக்கு ஏற்பட்ட சேதத்தைவிட  மத்திய வங்கிப் பிணைமுறி மோசடி அதிக சேதத்தை ஏற்படுத்தியிருக்கிறது என்கிறது 12ஆம் திகதி வெளிவந்த திவயினவின் ஆசிரியத் தலையங்கம். பிணைமுறித் திருடர்களுக்கு கன்னத்தில் ஒரு பலத்த அறை கொடுப்பதற்கு மகிந்தவிற்கு மக்கள் வாக்களித்திருக்கிறார்கள் என இது மேலும் தொடர்கிறது. முன்னணி சோசலிசக்கட்சி கூறுவதுபோல்  நல்லாட்சி அரசு மீதான வெறுப்பை பலமாகக் காட்டுவதற்கு மக்களுக்கு வேறு வழி தெரியவில்லை என்பதை இவ்வாசிரிய தலையங்கம் உறுதிப்படுத்துகிறது.

மேற்கூறப்பட்ட காரணங்களுடன் யாப்பு சீர் திருத்தத்தை பூர்த்தி செய்யாமையும் நல்லாட்சி அரசுக்கெதிராக மக்கள் மகிந்தவிற்கு வாக்களித்தமைக்கு ஒர மேலதிக  காரணம் என்கிறது ரச எனும் சிங்களப் பத்திரிகையின் ஆசிரிய தலையங்கம்.  யாப்பு மறுசீரமைப்பின் மூலம் ஜனாதிபதித் தேர்தலில் தமக்கு வாக்களித்த தமிழ் மக்கள் சுய கௌரவத்துடன் வாழும் யாப்பை உருவாக்காதது மட்டுமன்றி அத்தவறை நியாயப்படுத்தும் விதத்தில் பொருத்தமற்ற தர்க்கங்களை அரசிலுள்ளவர்கள்  முன்வைத்தமையும்  நல்லாட்சிக்கெதிரான எதிப்பலைக்கு மிகப்பிரதான காரணமென்கிறது ரச பத்திரிகையின் ஆசிரிய தலையங்கம். இன்று வட கிழக்கில் மகிந்த ராஜபக்ஷவிற்கு தமிழ் மக்களின் ஆதரவு மிகக்குறைவாக இருப்பதை தேர்தல் முடிவுகள் காட்டுகின்றன. எனவே தமிழ் மக்களின் மனதை வென்றெடுப்பதற்கு மகிந்த விரைந்து செயற்பட வேண்டும் என்கிறது 12ஆம் திகதிய ஐலன்ட் ஆசிரிய தலையங்கம். 12ஆம் 13ஆம் திகதிகளில் வெளிவந்த எந்தவொரு சிங்களப் பத்திரிகையின்  அல்லது ஆங்கிலப் பத்திரிகையின் ஆசிரியர் தலையங்கத்தில் மகிந்தவின் வெற்றிக்கு இடைக்கால அறிக்கை தொடர்பான பிரசாரம் அல்லது இனவாதம் காரணம் என்று குறிப்பிடப்படவேயில்லை.

மேற்கூறிய இரண்டு நாட்களிலும் வெளிவந்த தென்னிலங்கைப் பத்திரிகைகளில் மகிந்தவின் வெற்றிக்கு இனவாதம் காரணம் எனும் கருத்தை எந்தவொரு சிங்களப் புத்திஜீவியோ அல்லது அரசியல் விமர்சகரோ முன்வைக்கவில்லை.  இது தவிர வீ சிங்கள வானொலி அலைவரிசையில் காலை ஏழு மணிக்கு ஒலிபரப்பாகும் சித்தமுல்ல எனும் உண்மையைத் தேடும் நிகழச்pயில் சிங்கள வாக்காளர்கள் தொலைபேசி மூலம் வழங்கிய கருத்துக்களும் இங்கு குறிப்பிடத்தக்கவை. சுமார் 15 நேயர்கள் கருத்துத் தெரிவித்தார்கள். மேற்சொல்லப்பட்ட காரணங்களுடன் தற்போதைய நல்லாட்சி அரசாங்க அமைச்சர்கள் மகிந்த குடும்பத்தினரின் ஊழல்களை நிரூபிக்காமல் அவரை வெறுமனே அவதூறு செய்தமையே தாங்கள் மகிந்தவிற்கு வாக்களித்தமைக்கு ஒரு  மேலதிக காரணம் என்று அனேகமானவர்கள் கூறினார்கள். ஒரேயொரு பெண்மணி மாத்திரம் வழமையான  காரணங்களுடன் நாட்டைப் பிரிக்கும் யாப்பையும் தனது மகிந்த ஆதரவுக்கு  காரணமாகக் காட்டினார்.

இதேவேளை தமிழ்த் தரப்பினால் வெளியிடப்படும்  செய்திகள் சிங்கள ஊடகங்களில் பிரதான இடத்தைப் பிடித்திருந்தன. பிரச்சனைத் தீர்வு மகிந்தவின் எழுச்சியினால் கடினமாக்கப்பட்டிருக்கிறது என்று வடக்கு மாகாணசபை உறுப்பினர் ஒருவர் தெரிவித்த கருத்து  சிங்கள வானொலிச் செய்தியொன்றில் கடந்த வாரம் குறிப்பிடப்பட்டது.

13ஆம் திகதி லக்பிமப் பத்திரிகையின் முதல் பக்கத்தில் வெளியிடப்பட்ட ஒரு செய்தி இங்கு குறிப்பிடத்தக்கது. மகிந்த ராஜபக்ஷவிற்கு பெரும்பான்மையான சிங்கள வாக்குகள் கிடைத்திருக்கின்றன. உத்தேச புதிய யாப்பினை இடையில் கைவிடவேண்டிய நிலை ஏற்பட்டிருக்கின்றது என்று  திரு.சுமந்திரன் செய்தியாளர்களுக்குத் தெரிவித்ததாக அச்செய்தி கூறுகின்றது. இம்முறை உள்ள10ராட்சித் தேர்தலில் வடக்குத் தமிழ் மக்கள் உத்தேச யாப்புத் திருத்தத்திற்கான இடைக்கால அறிக்கையை நிராகரித்து தமது வாக்குகளைப் பயன்படுத்தியுள்ளனர். ஆனால் தெற்கில் அதிகாரம் மகிந்தவிற்குக் கிடைத்திருக்கிறது என சுமந்திரன் மேலும் கூறினார் என்று இச் செய்தி தொடர்கிறது.

இச்செய்தியின் படி தமிழர்கள் இடைக்கால அறிக்கையை நிராகரித்திருக்கிறார்கள். எனவே இடைக்கால அறிக்கையில் சமஷ்டியோ அல்லது நாட்டைப்பிரிக்கும் தீர்வோ இல்லையெனும் செய்தி இச்செய்தியை வாசிக்கும் சிங்கள மக்களுக்குச் செல்கிறது.  தவிரஇ புதிய யாப்பு ஒற்றையாட்சி யாப்பு எனத் தெளிவாக சிங்களத்தில் குறிப்பிடும் இடைக்கால அறிக்கையில் சமஷ்டி இல்லையென விளங்குவதற்கு பெரிய சட்ட நிபுணத்துவமோஇ ரொக்கட் விஞ்ஞானியின் மூளையோ  சிங்களவர்களுக்குத் தேவையில்லை. இதனால்தான் இடைக்கால அறிக்கையினடிப்படையில் இனவாதப் பிரசாரம் செய்து மகிந்த அமோக வெறிறி பெற்றாரென்று  சில தமிழ் ஊடகங்கள் கூறும் கருத்தை  தென்னிலங்கையில் எந்தப் பத்திரிகையிலோ பொதுமக்கள் வழங்கும் வானொலிச் செவ்விகளிலோ காணமுடியவில்லை. அவ்வாறு சொல்லியிருந்தால் ஒற்றையாட்சி எனும் சாதாரண சிங்களச் சொல்லை விளங்குமளவு சராசரி நுண்ணறிவு கூட இல்லாதவர்கள் தாங்கள்; என்பதை சிங்களவர்களே அம்பலப்படுத்துவதாக இருந்திருக்கும்.

இதேவேளை இடைக்கால அறிக்கை எனும் துரும்பு கிடைத்திருக்காவிட்டால் கூட்டமைப்பு வாக்குகளைப் பெற்றிருக்கமாட்டாது எனும் வாதத்தினை கூட்டமைப்புத் தலைவர்களே ஏற்றுக்கொள்ள மாட்டார்கள். கூட்டமைப்புக்கு வாக்களிப்பதற்கு வேறு காரணங்களில்லையென்று வாதிட முடியாது.

மகிந்த அணியைச் சேர்ந்த ஜி.எல் பீரிஸ் தயான் ஜயதிலக போன்ற சிலர் இடைக்கால அறிக்கையிலிருக்கும் சமஷ்டி நாட்டைப் பிரிக்குமெனக் கூறுகிறார்கள். ஒரு பேச்சுக்கு மகிந்த சமஷ்டித் தீர்வை ஆதரிக்க முன்வருகிறார் என வைத்துக்கொள்வோம். ஜீ.எல்லும் தயானும் என்ன செய்வார்கள்? உடனே சமஷ்டிப் பிரச்சார செயலகம் ஒன்றை அமைக்கும்படி முன்னாள் ஜனாதிபதிக்கு ஆலோசனை கூறுவதோடு அதன் பணிப்பாளர் நாயகம் பதவிக்கு தமக்குள் அடித்துக் கொள்வார்கள். இதற்குச் சான்று அவர்களது கடந்த காலம். சமஷ்டித் தீர்வுதான் நாட்டுப் பிரிவினையைத் தடுக்கவல்ல மிகச்சிறந்த தீர்வு என சந்திரிகாவிடமிருந்து நியமன எம்.பி பதவியையும் அமைச்சர் பதவியையும் பெற்ற ஜி.எல் பீரிஸ் 1994 தொடக்கம் 2001 ஆம் ஆண்டுவரை மிகத் தீவிரமாக சிங்கள மக்களிடம் பிரச்சாரம் செய்தவர். சிங்கள மக்களிடம்   சமஷ்டி நாட்டுப் பிரிவினையைத் தடுக்கக் கூடிய மிகச்சிறந்த தீர்வென மிகவும் அதிகமாக பிரச்சாரம் செய்தவர் தயான் என்பது உலகறிந்த உண்மை. சந்திரிகா அரசில் இருந்தபோது நீலன் திருச்செல்வத்துடன் இணைந்து ஒரு அரசியல யாப்பை வரைந்தவர் ஜி எல் பீரிஸ்;. இரண்டயிரமாம் ஆண்டு பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டு  சமஷ்டி யாப்பென கொளுத்தி விளையாடப்பட்ட  அரசியல் யாப்பில் ஒற்றையாட்சி எனும் சொல்லை முற்றாக அகற்றி அதற்குப்பதிலாக இலங்கை பிராந்தியங்களின் ஒன்றியம் எனும் சொற்றொடரை சகல மொழிகளிலும் சேர்த்தவர் இதே ஜி.எல் பீரிஸ். காணாத குறைக்கு  2002இல் ரணிலுடனிருந்தபோது மீண்டும் சிங்கள மக்களிடம் சமஷ்டியை ஆதரித்து பிரச்சாரம் செய்தது மட்டுமல்லாமல் ஒஸ்லோ சென்று சமஷ்டித் தீர்வைப்பற்றி புலிகளுடன் பேசியவர் இந்த பீரிஸ். பீரீசும் தயானும் அரசியலிலும் சட்டத்திலும் நிபுணர்கள்.இந்த நிபுணத்துவத்தைக் காட்டி கலாநிதிப் பட்டம் பெற்றவர்கள். சில கலாநிதிப் பட்டங்களை விட அவை அச்சிடப்படும் சான்றிதழ் கடதாசிகள் தரம் கூடியவை என்பது ஒரு நவீன கல்விக் கோட்பாடு.நடவடிக்கைகளைப் பார்க்கும் போது இந்தக் கோட்பாட்டின் தோற்றத்தின் மீது இவர்கள் செல்வாக்கும் இருந்திருக்குமோ என எண்ணத் தோன்றுகிறது. பீரிஸையும் தயானையும் போன்ற கோமாளிகள் இன்று தமிழ்த் தரப்பிலும் இருக்கிறார்கள். பிரச்சார மேடைகளை விஜய் ரீவியின் கலக்கப்போவது யாரு? மட்டத்துக்கு இறக்குபவர்கள்;. தமிழ் நாட்டில் பிறந்திருந்தால் கில்லாடிகள் சினிமாவில் புகுந்து விளையாடியிருப்பார்கள்;. கவுண்டமணியும் செந்திலும் பட்டினி கிடந்து செத்திருப்பார்கள்.

இன்று ஜி.எல் பீரிஸ் சிங்களத்தில் ஏக்கீய ராஜ்ய(ஒற்றையாட்சி) எனத்  தெளிவாக எழுதியிருக்கும்  உத்தேச யாப்பை நாட்டைப்பிரிக்கும் சமஷ்டி எனக்கூறுகிறார்.  உண்மையில் அங்கோடை முல்லேரியா உள்ள10ராட்சி வட்டாரங்களில் மகிந்தவிற்கு வாக்களித்த நோயாளிகள் மட்டுமே இதை நம்பியிருப்பார்கள். இனவாதத்திற்கான வாக்கு மகிந்த அலையை ஏற்படுத்தி கொழும்பு அரசியலைக் கொதிநிலைக்குக் கொண்டு சென்றுள்ளது என்று சில தமிழ்ப்பத்திரிகைகளின் ஆசிரிய தலையங்கங்களும் புத்திஜீவிகளின் அறிக்கைகளும் மிகவும் அழுத்திக்கூறுகின்றன. இதை நம்புவதற்கு தமிழர் தாயகம் என்ன அங்கொடை வைத்தியசாலையா?

புத்தி ஜீவிகளின்; புத்தி மந்தமாக இருக்கலாம். ஆனால் தமிழ் மக்கள் மூளை வளர்ச்சி குன்றியவர்களல்ல. பீரிஸினதும் ஜயதிலகவினதும் இனவாதப் பிரச்சாரத்திற்கு சிங்கள மக்கள் வாக்களித்தார்கள் என்று  சில தமிழ்ப் பத்திரிகையாளர்களும் புத்தி ஜீவிகளும்  கூறத் தொடங்கியிருக்கிறார்கள். துணிச்சலிருந்தால் தமிழ் மக்கள் இடைக்கால அறிக்கையின் ஒற்றையாட்சி யாப்பை சமஷ்டி என்று நம்பி  தமிழ்த் தேசிய கூட்டமைப்புக்கு வாக்களித்தார்கள் என்று இவர்கள் ஆசிரிய தலையங்கங்களும் தீட்டி அறிக்கைகளும் விடுவார்களா? முடியுமானால் ஓர் ஆய்வைச் செய்து மகிந்தவுக்களிக்கப்பட்ட வாக்குகள்  எல்லாம் இனவாதத்திற்கான வாக்குகள் என்று நிரூபிப்பார்களா? ஆகக்குறைந்தது இது ஆதாரத்துடன் நிரூபிக்கப்பட்டிருக்கின்றது என்று எங்கேயாவது செய்திகள் வந்திருந்தால் எடுத்துக்காட்டுவார்களா?

முடிவுகள் 
   
1. மகிந்தவின் வெற்றிக்குக் காரணம் இனவாதமல்ல
2. இதற்கான காரணம் வறிய  மற்றும் கீழ் மட்ட நடுத்தர சிங்கள  மக்களை நசுக்கும் பொருளாதாரச் சுமை
3. பொருளாதாரப் பிரச்சனைக்கு ஊழல் அரசியல்வாதிகள் கண்ட தீர்வு நாட்டின் விற்பனையும் குத்தகையும்
4. ஆனால் தெற்கு மக்களின் பொருளாதாரப் பிரச்சனைக்கு தீர்வு புலம் பெயர்ந்தோர் உள்ளிட்ட அனைத்து இலங்கையர்களும் இது எமது நாடு என்ற உணர்வுடன் தேசிய உற்பத்திக்கு  உச்ச அளவில் பங்களிப்பு செயயக்கூடிய நிலைமையை உருவாக்கும் நியாயமான அரசியல் தீர்வு
5. ஒவ்வொரு காலகட்டத்திலும் தமிழ் பேசும் தரப்பிலும் சிங்களவர் தரப்பிலும் தோற்ற அரசியல்வாதிகள் இனவாத ஆயுதத்தைக் கையிலெடுத்து தீர்வைத் தடுப்பார்கள்
6. தமிழ் மக்கள் சிங்கள மக்களுடன் நேரடியாகப் பேச வேண்டும்.முதல் கட்டமாக  இரு தரப்பிலுமுள்ள உள்ள10ராட்சிப் பிரதிநிதிகள் மேலுள்ள விடயங்களைப்பற்றி பேச வேண்டும்.