மட்டக்களப்பு மாவட்டத்தில் 68 சதவீத வாக்களிப்பு

மட்டக்களப்பு  மாவட்டத்தில் 68 சதவீதம் வாக்களிப்பு இடம்பெற்றுள்ளது.
இங்கு வாக்களிப்பு சுமூகமாகவும் அமைதியாகவும் இடம்பெற்றுள்ளது.

இம்முறை மட்டக்களப்பு மாவட்டத்தில் 3 இலட்சத்து 89ஆயிரத்து 582 பேர் வாக்களிக்க தகுதிபெற்றுள்ளனர்

மட்டக்களப்பு மாவட்டத்தில் 144 வட்டாரங்களில் 120 கொத்தணி வாக்கெண்ணும் நிலையங்களாக அமைக்கப்பட்டுள்ளதுடன் 24 வாக்களிப்பு நிலையங்கள் தனிப்பட்ட ரீதியாக அந்தந்த வாக்களிப்பு நிலையங்களில் வாக்கெண்ணுவதற்காக ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

மட்டக்களப்பு இந்துக் கல்லூரியில் தேர்தலுக்கான மத்திய நிலையம் அமைக்கப்பட்டுள்ளது. 

மட்டக்களப்பு மாவட்டத்தைப் பொறுத்தவரையில் 16 கட்சிகள் 5 சுயேட்சைக்குழுக்களிலிருந்து 238 உறுப்பினர்களை தெரிவு செய்வதற்காக 901 பெண்கள் உள்ளிட்ட 2736 வேட்பாளர்கள் போட்டியிட்டிருந்தனர் .
அந்தந்த வட்டாரங்களிலேயே வாக்கெண்ணும் பணிகள் இடம்பெற்று, அதற்கான முடிவுகள் அந்தந்த வட்டாரங்களிலேயே அறிவிப்பதற்கான ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக எமது   செய்தியாளர் தெரிவித்தார்.