வின்சென்ற் தேசிய பாடசாலையின் வருடாந்த இல்ல விளையாட்டுப் போட்டி

(வரதன்)
கிழக்கு மாகாணத்தில் பிரசித்தி பெற்ற பெண்கள் பாடசாலையான மட் வின்சென்ற தேசிய பாடசாலையின் வருடாந்த இல்ல விளையாட்டுப் போட்டி  வெபர் மைதானத்தில் பாடசாலை அதிபர் திருமதி கரணியா சுபாகரன் தலைமையில் இடம்பெற்றது.  அதிதிகள் வரவேற்கப்பட்டு தேசிய கொடியெற்றப்பட்டு தேசிய கீதம் இசைக்கப்பட்டு வரவேற்பு நடனம் இடம்பெற்றதைத் தொடர்ந்து பாடசாலை மாணவர்களினால் சமாதானப் புறாக்களும் பலுர்ண்களும் பறக்க விடப்பட்டதைத் தொடர்ந்து பாடசாலை மாணவத் தலைவிகளினால் ஒலிம்பிக் தீபம் ஏற்றப்பட்டு அதிதிகளால் விளையாட்டு நிகழ்வுகள் ஆரம்பித்துவைக்கப்பட்டன.


இப்பாடசாலையில் இல்லங்களுக்கிடையிலான 100மீற்றர் ஓட்டம் அஞ்சல் ஓட்டம்  அணிநடை உடற்பயிற்சி போட்டிகளும் இன்னும் பல போட்டி நிகழ்வுகளும் இடம்பெற்றன.அதனைத் தொடர்ந்து பழைய மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கான  விளையாட்டு நிகழ்வுகளும் பெற்றோர்களுக்கான விளையாட்டு நிகழ்வுகளும் இடம்பெற்றன.
 இடம்பெற்ற போட்டிகளில் அதிக திறமைகளைக் காட்டி வின்சென்ற இல்லம் முதலிடத்தையும் 2ம் இடத்தினை சம்னஸ் இல்லமும் 3ம் இடத்தினை குரொவ்ட் இல்லமும் தெரிவாகிய அணிகளுக்கு பிரதம அதிதியால் பரிசில்களும் கேடயங்களும் வழங்கிவைக்கப்பட்டன.

இந்நிகழ்விற்கு பிரதம அதிதியாக மாநகர ஆணையாளர் ஏ.மணிவண்ணன் சிறப்பு அதிதிகளாக வைத்தியர்.யாழினி பிரசாந் மற்றும் வலயக்கல்விப் பணிப்பாளர் கே. பாஸ்கரன் உடற்கல்வி அதிகாரி வீ.லவகுமார் ஆகியோர் கலந்து கொண்டதுடன் பாடசாலை மாணவர்கள் ஆசிரியர்கள் ஆகியோர்கள் கலந்து கொண்டனர்.