ஜேர்மன் உதயம் தன்னார்வத் தொண்டு நிறுவனத்தால் ஒரு லட்சம் ரூபா பெறுமதியான வாழ்வாதார உதவிகள் வழங்கி வைக்கப்பு.



ஜேர்மன் உதயம் தன்னார்வ தொண்டு நிறுவனம் ஏற்பாடு செய்திருந்த வறுமைக்கோட்டின் கீழ் வாழ்பவர்களுக்கான வாழ்வாதாரத்தை கட்டியெழுப்பும் நோக்கில் ஒரு லட்சம் ரூபா பெறுமதியான ஆடுகள் வழங்கி வைக்கும் செயற்பாடு உத்தியோகபூர்வமாக இன்று நடைபெற்றது.


இச்செயற்பாடானது நிறுவனத்தின் இளைஞர் தொண்டர்களின் ஒருங்கிணைந்த ஏற்பாட்டில்
வழங்கி வைக்கப்பட்டது.

இதன் போது கருத்துத் தெரிவித்த வாழ்வாதார உதவி பெற்றுக் கொண்ட பாக்கியராசா தேவராசா.
உண்மையிலேயே இன்று நான் மிகவும் சந்தோசமாக உள்ளேன் காரணம் நான் ஒரு முன்னாள் போராளி போராட்ட காலங்களுக்கு பின் எமது வாழ்வாதாரம் மிகவும் கஸ்டமாக அமைந்துவந்தது அதன் படி எனது குடுப்பத்தில் ஐந்து உருப்பினர்கள். நான் அன்றாடம் கூலித் தொழிலுக்கு சென்று தினக்கூலியில் எனது குடும்பத்தை கவனித்துவந்தேன் அந்நிதியை  கொண்டு எமது நாளாந்த மற்றும் பிள்ளைகளின் படிப்பிற்காக செலவு செய்வதென்பது மிகவும் கடினமாகவே இருந்தது.
இதன் போது தான் ஜேர்மன் உதயம் தன்னார்வ தொண்டு நிறுவனத்தின் செயற்பாட்டாளர்கள் இங்கு வருகை தந்து எனது நிலைமைகளை கருத்தில் கொண்டு சுயதொழிலுக்கான  ஒரு லட்சம் ரூபா பெறுமதியான ஆடுகள் மற்றும் வீட்டிற்கு தேவையான பொருட்களை வழங்கி வைத்துள்ளனர்.
அந்தவகையில் எனது குடும்பத்தினர் உதயம் நிறுவனத்தின் நிதியுதவியாளர்களுக்கும் செயற்பாட்டாளர்களுக்கும் மிகவும் நன்றி செலுத்த கடமைப்பட்டுள்ளோம். அத்துடன் இவ்வாறான வாழ்வாதார உதவிகள் போல் மேலும் பல வறுமைக்கோட்டின் கீழ் வாழ்கின்றவர்களுக்கு உதவிபுரிய வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன். என அவர் கருத்துத் தெரிவித்தார்.
அத்துடன் உதயம் தொண்டு நிறுவனம் இக்குடும்பத்துக்காக நிதியை வழங்கிய வாறண்டோர்வ் (warendorf) வாழ் உறவுகளுக்கும் அயராது மக்களுக்காக உழைத்துவரும் தாயக மற்றும் ஜேர்மனிய உதயம் தொண்டர்களுக்கு   பாராட்டுக்களைத் தெரிவித்துக் கொண்டமை குறிப்பிடத்தக்கது.