மட்டக்களப்பு மாநகர மேயராக தி. சரவணபவன் உத்தியோக பூர்வமாக நாளை அறிவிக்கப்படுவார்?

மட்டக்களப்பு மாநகர மேயராக திரு. தியாகராஜா சரவணபவன் அவர்கள் தெரிவு செய்யப்பட்டுள்ளதாக நம்பகத்தன்மையான தகவல்கள் தெரிவிக்கின்றது. இன்று தமிழ்த் தேசிய கூட்டமைப்பு உறுப்பினர்கள் ஒன்றுகூடி இத்தீர்மானத்தை எடுத்தாக அறியக் கூடியதாக உள்ளது. இவர் மட்டக்களபபு மாநகரை அபிவிருத்திப் பாதையில் கொண்டு செல்லக் கூடிய ஆற்றலும், திறமையும் உள்ளவர் என்பதும் பரவலாகப் பேசப்படுகின்றது. இவரைப் பல்வேறு எதிர்பார்ப்புகளுடனேயே மட்டக்களப்பு மக்கள் தெரிவு செய்துள்ளார்கள்.

தமிழ் தேசிய கூட்டமைப்பு சார்பாக கல்லடி, கல்லடி-வேலூர் 13 ம் வட்டாரத்தில் தமிழ் தேசிய கூட்டமைப்பு சார்பாகப் போட்டியிட்ட திருவாளர் தியாகராஜா சரவணபவன் அவர்கள் அமோக வெற்றியீட்டியுள்ளார். இவர் பலத்த போட்டிக்கு மத்தியிலேயே இவ்வெற்றியைப் பெற்றிருக்கின்றார். இவர்  தியாகராஜா ரஞ்சிதம் தம்பதிகளின் புத்திரராவார். இவரின் தந்தை முன்னாள் மாநகசபை மேயர், கிழக்கு மாகாணக் கல்விப் பணிப்பாளர், கிழக்கு மாகாண கல்விச் செயலாளர், சிறந்த அதிபர் .ஆகிய பதவிகளுக்குச் சொந்தக்காரராவார்.

இவரே அமையவிருக்கும் மாநகரசபைக்கு நியமிக்கப்படும் மேயர் எனப் பரவலாக பேசப்படுகின்றது. இவரின் கல்வித்தரம் M.Sc. Statistics, B.Sc. Maths.  ஆசிரியராக 01 வருடமும், பிரதேச செயலகங்களில் நிகழ்ச்சித் திட்ட இணைப்பாளராக 07 வருடங்களும்,  ஒக்ஸ்பாம் நிறுவனத்தில் சிரேட்ட நிகழ்ச்சித் திட்ட இணைப்பாளராக 13 வருடங்களும், வூஸ்க் நிறுவனத்தில் நிகழ்ச்சித் திட்ட இணைப்பாளராக 3 வருடங்களும்கடமையாற்றியுள்ளவர்   இவர் பிரதேச செயலக நிகழ்ச்சித் திட்ட இணைப்பாளராக சேவையாற்றிய காலப்பகுதியில் கிரான், வாகரை போன்ற பகுதிகளில் பல வீட்டுத்திட்டங்கள் அமைக்க வழி வகுத்துள்ளார்.


ஒக்ஸ்பாம் நிறுவனத்தில் பல்வேறு திட்டங்களை முன்மொழிந்து எமது பகுதிகளுக்கு வெளிநாட்டு உதவிகள் பலவற்றைப் பெற்று எமது பகுதியில் யுத்த காலத்திலும், சுனாமி, வெள்ளப்பெருக்கு போன்ற அனர்த்தங்களின் போதும் எமது மக்களின் வாழ்வாதாரங்கள், வீட்டுத் திட்டங்கள் ஆகியன சிறப்புறச் சேவையாற்றியுள்ளார்,   இறுதியாக வூஸ்க் நிறுவனத்தில் நிகழ்ச்சித்திட்ட இணைப்பாளராக முல்லைத்தீவு, திருகோணமலை, மட்டக்களப்பு ஆகிய பிரதேசங்களில் கடமையாற்றியுள்ளார். இவர் தற்போது கல்லடி ஸ்ரீ சித்தி விநாயகர் ஆலய பரிபாலன சபையின் தலைவராகவும், மட்டக்களப்பு மண்முனை வடக்கு தமிழரவுக் கட்சிக் கிளையின் பொருளாளராகவும், கல்லடி தொடக்கம் மஞ்சந்தொடுவாய் வரைக்குமாக பொது அமைப்புக்களின் ஒன்றியப் பொருளாளராகவும் செயற்படுகின்றார்.