தமிழ்த்தேசியக் கூட்டமைப்புக்கு நிபந்தனையற்ற ஆதரவை வழங்குவோருடன் ஆட்சியமைக்கத் தயார் -த.கலையரசன் தெரிவிப்பு


(சா.நடனசபேசன்)
நடைபெற்று முடிந்த உள்ளூராட்சி சபைத்தேர்தலில் நாவிதன்வெளிப் பிர
தேசசபையில் ஆட்சி அமைப்பதற்கு தமிழ்த்தேசியக் கூட்டமைப்புக்கு நிபந்தனையற்ற ஆதரவை வழங்கும் கட்சிகள் மற்றும் சுயேட்சைக்குழுவை இணைத்துக்கொண்டு ஆட்சியமைக்கத் தயாராக இருக்கின்றோம்.


என முன்னாள் கிழக்குமாகாணசபை உறுப்பினரும் சம்மாந்துறைத் தொகுதியின் தமிழரசுக்கட்சியின் தலைவருமான  த.கலையரசன் தெரிவித்தார்.

நாவிதன்வெளிப் பிரதேசசபையில் ஆட்சியமைப்பது தொடர்பாக ஊடகங்களுக்கு புதன்கிழமை மாலை கருத்துத் தெரிவிக்கையில் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
அவர் மேலும் தெரிவிக்கையில் நாவிதன்வெளிப்பிரதேசம் பெரிதும் பாதிக்கப்பட்ட பகுதியாக இருக்கின்றது இந்தப் பிரதேசத்தின் அபிவிருத்தியை மையமாக வைத்தே நாம் சேவையாற்றி வருகின்றோம் கடந்த காலத்தில் கூட பிரதேச சபையின் தவிசாளராக இருந்தும் மாகாண சபையின் உறுப்பினராக இருந்தும் சேவையாற்றியவன்
இம் முறை நடைபெற்ற தேர்தலில் எமக்கும் எமது கட்சியான தமிழ்த்தேசியக் கூட்டமைப்புக்கும் எதிராக பொய்ப்பிரச்சாரங்கள் மேற்கொள்ளப்பட்டபோதும் அதனைக் கூட  எமது மக்கள் பொருட்படுத்தாது தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு வாக்களித்து வெற்றியடையச் செய்துள்ளனர் அதற்கு நான் தலை வணங்கியவனாக நன்றி தெரிவித்துக் கொள்கின்றேன்.
 நாவிதன்வெளிப் பிரதேசசபையில் 7 வட்டாரம் இருக்கின்றது அதில் இரட்டை வட்டாரம் உள்ளடங்கலாக 4 வட்டாரத்தில்  5 உறுப்பினர்கள் தமிழ்த்தேசியக் கூட்டமைப்பில் போட்டியிட்டவர்கள் வெற்றிபெற்று இருப்பதுடன் ஐக்கியதேசியக்கட்சி மற்றும் ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சி ஆகிய கட்சிகளில் போட்டியிட்ட முஸ்லிம்கள்  இரு வட்டாரத்திலும்  சுயேட்சைக்குழு ஒரு வட்டாரத்திலும்;   வெற்றி பெற்றது.
அதேவேளை சுயேட்சைக்குழுவுக்கு இரண்டு போணஸ் ஆசனமும்  ஐக்கியதேசியக் கட்சி ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி மற்றும் நல்லாட்சிக்கான தேசிய முன்ணனி ஆகிய கட்சிகளுக்குத்  தலா ஒரு போனஸ் ஆசனமுமாக 5 போணஸ் ஆசனங்கள் கிடைக்கப்பெற்று இருக்கின்றது
  இந்நிலையில் தமிழ்த்தேசியக் கூட்டமைப்பு ஆட்சியமைப்பதற்கு இரு ஆசனங்கள் தேவையாக இருப்பதனால் நிபந்தனையற்ற ஆதரவை வழங்க முன்வருகின்ற எந்த அரசியல் கட்சியாக இருந்தாலும் சரி சுயேட்சைக்குழுவாக இருந்தாலும் சரி இணைத்துக் கொண்டு ஆட்சியமைப்பதற்குத் தயாராக  இருக்கின்றோம் என்றார்