எரிவாயுவின் விலையை அதிகரிப்பதா? இல்லையா? -அமைச்சர் ரிஷாத் பதி­யுதீன்

எரி­வாயு விலை அதி­க­ரிப்­பது தொடர்பில் தற்­போ­தைக்கு எவ்­விதத் தீர்­மா­னமும் எடுக்­க­வில்லை.எனினும் எரி­வா­யுவின் விலையில் அதி­க­ரிப்பு செய்­வ­தற்கு எரி­வாயு நிறு­வ­னங்கள் அனு­மதி கோரி­யுள்­ள­தாக அமைச்சர் ரிஷாத் பதி­யுதீன் தெரி­வித்தார்.

வர்த்­தக வாணிப அமைச்சில் நேற்று மாலை நடை­பெற்ற ஊட­க­வி­ய­லாளர் சந்­திப்பில் கலந்­து­கொண்டு உரை­யாற்­று­கை­யி­லேயே அவர் இதனைத் தெரி­வித்தார். அவர் மேலும் குறிப்­பி­டு­கையில்,

எரி­வாயு அத்­தி­ய­வ­சி­ய­மான ஒன்­றாக உள்­ளது. எனினும் அதன் விலை அதி­க­ரிப்பு தொடர்பில் மிகுந்த அவ­தா­னத்­துடன் நட­வ­டிக்கை எடுக்க வேண்டும். எனினும் நிறு­வ­னங்கள் அதன் விலை அதி­க­ரிக்­கப்­பட வேண்டும் என அனு­ம­தி­கோ­ரு­வ­தையும் தவிர்க்க முடி­யாது. அந்த வகையில் எரி­வாயு நிறு­வ­னங்கள் இரண்டு விலை அதி­க­ரிப்­புக்கு அனு­மதி கோரி­யுள்­ளது.

எனினும் விலை அதி­க­ரிப்பு குறித்து விலை நிர்­ண­யக்­குழு, வாழ்க்கைச் செலவு தொடர்­பான அமைச்­ச­ரவை உப குழு உட்­பட சகல தரப்­பிலும் பேச்­சு­வார்த்தை நடத்­திய பின்­னரே தீர்­மானம் எடுக்க வேண்டும்.

மேலும் எரி­வாயு விலை அதி­க­ரிப்பு தொடர்பில் பொது­வான கொள்­கைத்­திட்டம் வகுப்­பது தொடர்பில் அமைச்­ச­ர­வையில் தீர்­மா­னிக்­க­ப்பட்­டுள்­ளது. அதன் பிரகாரம் எதிர்காலத்தில் நடவடிக்கை எடுக் கப்படும் எனவும் அவர் மேலும் தெரிவித்தார்.