பாடசாலைகளுக்கு கிரிக்கெட் உபகரணங்கள் வழங்கிவைப்பு

(கதிரவன் )
விளையாட்டு அமைச்சு பாடசாலைகளில் கிரிக்கெட் விளையாட்டினை பிரல்யப்படுத்தும் திட்டத்தினை முன்னெடுத்து வருகி்றது.  இதற்காக 1000  பாடசாலைகள் தெரிவு செய்யப்பட்டுள்ளது. இதன் முதல் கட்டமாக 325   பாடசாலைகளுக்கு வலைப்பயிற்சி ஆடுகளங்கள் 600,000.00 செலவில் அமைத்துக் கொடுக்கப்பட்டுள்ளது. திருகோணமலை மாவட்டத்தில் இத்திட்டத்திற்கு அமைவாக நீண்டகாலம் கிரிக்கெட் விளையாட்டில் ஈடுபடும் 3  ஸ்ரீ கோணேஸ்வரா இந்துக் கல்லூரி, விலாந்நதா கல்லூரி, கந்தளாய் அக்ரபோதி  மகா வித்தியாலயம்  என்பன  இத்திட்டத்தில் உள்வாங்கப்ட்டுள்ளன.

நேற்று புதன்கிழமை 2018.02.21 காலை திருகோணமலை மாவட்ட செயலகத்தில் வைத்து இப்பாடசாலைகளுக்கு கிரிக்கெட் உகரணங்கள் அரசாங்க அதிபர் ஊடாக வழங்கி வைக்கப்பட்டது.

இந்நிகழ்வில் திருகோணமலை அரசாங்க அதிபர்  என்.ஏ.ஏ.புஸ்குமார,திட்டமிடல் பணிப்பாளர் திருமதி.கு.பரமேஸ்வரன்  உதவி திட்டமிடல் பணி்ப்பாளர் ஏம்.முஸ்இல், மாவட்ட விளையாட்டு உத்தியோகத்தர் பி.ஆர்.விமலசேன ஆகியோரும் கலந்து கொண்டனர்.