உள்ளுராட்சித் தேர்தல் கடமைகளில் ஈடுபட்ட அரசஊழியர்க்கான கொடுப்பனவுச் சுற்றுநிருபம் வெளிவந்தது : கொடுப்பனவு விபரம்

கடந்த 10ஆம் திகதி நாடளாவியரீதியில் நடைபெற்ற உள்ளுராட்சித்தேர்தலில் கடமையில் ஈடுபட்ட அரச ஊழியர்களுக்கான கொடுப்பனவு தொடர்பான சுற்றுநிருபத்தை தேர்தல்கள் ஆணையாளர் நாயகம் ஆர்.எம்.ஏ.எல்.ரத்னாயக்க வெளியிட்டுள்ளார்.

அதன்படி மாவட்ட தெரிவத்தாட்சி அலுவலரின் நியமனத்தைப்பெற்று தேர்தல் கடமையில் ஈடுபட்ட அலுவலர்க்கான கொடுப்பனவு விபரம் வருமாறு:

வலய மற்றும் வட்டார உதவி தெரிவித்தாட்சி அலுவலருக்கு 4000ருபா சிரேஸ்ட்ட தலைமை தாங்கும் அலுவலருக்கு 3750 ருபா
 மேலதிக சிரேஸ்ட்ட தலைமை தாங்கும் அலுவலருக்கு 3250ருபா
விசேட கனிஸ்ட்ட தலைமை தாங்கும் அலுவலருக்கு 2250ருபா
 கனிஸ்ட்ட தலைமை தாங்கும் அலுவலர் அல்லது எழுதுனருக்கு 2000ருபா அலுவலக கனிஸ்ட்ட ஊழியருக்கு 1750ருபாவும் வழங்கப்படும்.

வாக்கெண்ணல்!
வாக்கெண்ணும் பணியிலீடுபட்ட அலுவலர்க்கான கொடுப்பனவுகள்.

தலைமை வாக்கெண்ணும் அலுவலர் உதவி தெரிவத்தாட்சி மற்றும்சிரேஸ்ட்ட தலைமை தாங்கும் அலுவலருக்கு 4500 ருபா

வாக்கெண்ணும் அலுவலர் அல்லது சிரேஸ்ட்ட தலைமை தாங்கும் அலுவலருக்கு 4350ருபா

வாக்கெண்ணும் மேற்பார்வை வலய உதவி தெரிவத்தாட்சி அலுவலருக்கு 4350ருபா

மேலதிக சிரேஸ்ட்ட தலைமை தாங்கும் அலுவலருக்கு 3000ருபா 

கனிஸ்ட்ட தலைமை தாங்கும் அலுவலர் மற்றும் இலிகிதருக்கு 2500ருபா கனிஸ்ட்ட  ஊழியருக்கு 1500ருபாவும் வழங்கப்படும்.

பிரதேச செயலகமட்டத்தில் ஸ்தாபிக்கப்பட்ட பிரதேச இணைப்பு அலுவலக கடமைகளில் ஈடுபட்டவர்க்கான கொடுப்பனவு:

பிரதேச இணைப்பு அலுவலர்  உதவி தெரிவித்தாட்சி அலுவலரக்கு 4000ருபா சிரேஸ்ட்ட தலைமை தாங்கும் அலுவலருக்கு 3250 ருபா
கனிஸ்ட்ட தலைமை தாங்கும் அலுவலர் மற்றும் இலிகிதருக்கு  2500ருபா கனிட்ட ஊழியருக்கு 1500ருபாவும் வழங்கப்படும்.
 மேலதிக படியாக முறையே 2250 ருபா 2000ருபா 1250ருபா மற்றும் 750ருபா வழங்கப்படும்.

கையளித்தலும் ; ஏற்றலும் !
வாக்குப்பெட்டிகளை ஆவணங்களை கையளித்தலும் ஏற்றலும் கடமைக்கான கொடுப்பனவு:

கையளித்தலுக்கு :

உதவி தெரிவித்தாட்சி அலுவலர்க்கு 1500ருபா
 சிரேஸ்ட்ட தலைமை தாங்கும் அலுவலருக்கு 1250 ருபா
கனிஸ்ட்ட தலைமை தாங்கும் அலுவலர் மற்றும் இலிகிதருக்கு  900ருபா அலுவலக ஊழியருக்கு 800ருபாவும் வழங்கப்படும்.

ஏற்றலுக்கு!

உதவி தெரிவித்தாட்சி அலுவலர்க்கு 2500ருபா
சிரேஸ்ட்ட தலைமை தாங்கும் அலுவலருக்கு 2000 ருபா
கனிஸ்ட்ட தலைமை தாங்கும் அலுவலர் மற்றும் இலிகிதருக்கு  1500ருபா
அலுவலக ஊழியருக்கு 1200ருபாவும் வழங்கப்படும்.

இதற்கு மேலதிகமாக போககுவரத்து அவர்களது தூரத்திற்கு பொருத்தமாக வழங்கப்படும்.
அனைத்துக்கொடுப்பனவுகளும் எதிர்வரும் 30.04.2018க்கு முன் செலுத்தப்படல் வேண்டுமென தேர்தல்கள் ஆணையாளர் நாயகம் ரத்னாயக்கா சம்பந்தப்பட்ட சகலருக்கும் சுற்றுநிருபம் மூலம் அறிவித்துள்ளார்.