த.தே.கூட்டமைப்புடன் பேசத் தயார்! காரைதீவு சுயேச்சைக்குழுத்தலைவர் நந்தகுமார்அறிவிப்பு

(காரைதீவு நிருபர் சகா)

நடந்துமுடிந்த காரைதீவு பிரதேசசபைத்தேர்தல் பெறுபேற்றினடிப்படையில் கூடிய 4 ஆசனங்களைப்பெற்ற தமிழ்த்தேசியிக்கூட்டமைப்புடன் பேச்சுவார்த்தை நடாத்த நாம் தயாரென சுயேச்சைக்குழுத்தலைவர்சந்திரசேகரம் நந்தகுமார் தெரிவித்தார்.


காரைதீவு பிரதேசபைக்கான தேர்தலி;ல் த.அ.கட்சி 4ஆசனங்களையும் சுயேச்சைக்குழு-1 அணி 2ஆசனங்களையும் ஸ்ரீல.மு.கா. 2ஆசனங்களையும் ஸ்ரீல.சு.கட்சி 2ஆசனங்களையும் அ.இ.ம.காங்கிரஸ் 1ஆசனத்தையும் சுயேச்சை 2 அணி 1ஆசனத்தையும் பெற்றுக்கொண்டன.

இங்கு ஆட்சியமைப்பதானால் 7ஆசனங்கள் தேவை. அங்கு அறுதிப்பெரும்பான்மை ஆசனங்களை யாரும் பெறவில்லை. எனவே கூட்டாட்சிக்கான பேச்சுவார்த்தை நேரமிது.

இந்தநிலையில் மக்களுக்கு ஏலவே அளித்த வாக்குறுதியினஎப்படையில் தேர்தல் முடிந்தபிற்பாடு காரைதீவு மகாசபை இயங்கும் எனத் தெரிவிக்கப்பட்டதன் அடிப்படையில் (13) மகாசபையின் வழிநடத்தல் குழு சபைச்செயலாளரின் இல்லத்தில் கூடியது.

வழிநடாத்தல்குழுவின் முன்னிலையில் சுயேச்சை அணித்தலைவர்ச.நந்தகுமர் உள்ளிட்ட வேட்பாளர்கள் அனைவரும் கலந்துகொண்டனர்.


அங்கு எடுக்கப்பட்டமுடிவுகள் தீர்மானங்கள் பற்றி தலைவர் ச.நந்தகுமார் ஊடகத்திற்கு கருத்துத் தெரிவிக்கையில் பின்வருமாறு கூறினார்.


நாம் தேர்தலுக்கு முன்பு மகாசபை கூட்டியகூட்டத்தில் எமது காரைதீவு தமிழ்மக்களின் இருப்பு மானம் காப்பாற்றும்வகையில் செயற்படுவதென்றும் எமக்குக்கிடைக்கின்ற ஆசனங்களை எம்மிடையே சுழற்சிமுறையில் அனைவரும் பகிர்ந்து சபையை அலங்கரிப்பது என்று தீhமானமெடுத்திருந்தோம்.

அன்று வழங்கிய வாக்குறுதிப்படி காரைதீவில் தமிழ்மக்களின் இருப்பைப்பாதுகாக்க தற்சமயம் அதிகூடிய 4 ஆசனங்களைப் பெற்ற த.தே.கூட்டமைப்புடன் பேசத்தயார் என்று இத்தால் பகிரங்கமாக அறிவிக்கின்றோம்.
மேலும் தலைவராகிய நான்(ச.நந்தகுமார்) சி.நந்தேஸ்வரன் மா.புஸ்பநாதன் உள்ளிட்ட நால்வர் தாமாகவே சபைக்குச்செல்வதில்லையென்றும் எக்காரணம்கொண்டும் சபை பொறுப்பை எடுப்பதில்லை என்றும் பெருந்தன்மையுடன் கூறியதற்கமைவாக ஏனைய 8பேருக்கும் 4வருடத்தினுள் சுழற்சிமுறையில் அந்த 2 உறுப்பினர் பதவியை சுழற்சிமுறையில் வழங்குவதென்றும் தீர்மானமாகியது.

அதற்கமைய திருவுளச்சீட்டின்மூலம் முதல் வருடத்தில் யார் யார் உறுப்பினராக சபையை அலங்கரிப்பது என்றும் அடுத்தடுத்த வருடத்தில் யார் யார் சபைக்குச்செல்வது என்றும் சந்தோசமாக ஏகமனதாக முடிவானது.

எனவே ஆட்சியமைப்பதற்குத் தேவையான ஆதரவைத்தர நாம் தயார் .அத்துடன் த.தே.கூட்டமைப்புடன் பேசவும் தயார் . என்று தெரிவித்தார்.