த. தே. கூட்டமைப்பானது தமிழர்களின் வாக்குபெற்றுக்கொண்டு சகோதர இனத்தினை பலப்படுத்துவதில் அக்கறையாக உள்ளனர்.

தற்போது இருக்கும் மைத்திரி ரணில் நல்லாட்சி அரசாங்கம் உடணடியாக பதிவி விலகி மக்களின் ஆணையை ஏற்றுக் கொள்ள வேண்டும் என்று முன்னாள் பிரதி அமைச்சரும் தமிழர் ஜக்கிய முன்னனியின் தலைவருமான விணாயகமூர்த்தி முரளிதரன் (கருணா அம்மான்) தெரிவித்தார்.

நடைபெற்று முடிந்த உள்ளுராட்சி மன்ற தேர்தலில் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்களின் பொதுஜனபெரமுன கட்சியானது அதிக உள்ளுராட்சி மன்றங்களின் ஆசனங்களை கைப்பற்றியதனை பாராட்டி நேற்று கிரானில் தமிழர் ஜக்கிய சுதந்திர முன்னனியின் இளைஞர் அணியினரினால் பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கி பாராட்டு நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.



.இதன் போது முன்னாள் பிரதி அமைச்சரும் தமிழர் ஜக்கிய முன்னனியின் தலைவருமான விணாயகமூர்த்தி முரளிதரன் (கருணா அம்மான்) நிகழ்வில் கலந்து கொண்டு தமது கருத்தினை  இவ்வாறு தெரிவித்தார்.அவர் தொடர்ந்து தமது கருத்தினை தெரிவிக்கையில் முன்னாள் ஜனாதிபதி யின் கட்சியானது அதிகளவு உள்ளுராடசி மன்றங்களை கைப்பற்றி பாரிய வெற்றி பெறும் என்று கடந்த ஒரு மாதங்களுக்கு முன்பே ஊடகம் ஒன்றிக்கு கருத்து தெரிவித்திருந்தேன்

 இன்று ஜரோப்பிய நாடுகளில் இவ்வாறனதொரு தேர்தல் பின்னடைவு முடிவுகள் பெற்றிருந்தால் அதிகாலையிலேயே பதவி விலகி இருப்பார்கள். 340 உள்ளுராட்சி மன்றங்களில் 239 ஆசனங்களை முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் கட்சி கைப்பற்றியுள்ளமை பாராட்டதக்கது.

பிரதேச மக்கள் சரியான தீர்ப்பு வழங்கியுள்ளனர்.

எனது கட்சியான தமிழர் ஜக்கிய முன்னனியானது மட்டக்களப்பு மாவட்டத்தில் 7 ஆசனங்களை பெற்றுள்ளது. இது எனக்கு கிடைத்த வெற்றியாகும்.எனது கட்சி ஆரம்பித்து ஒரு வருட காலமாகும். எனது கட்சி எதிர் நோக்கிய கன்னித் தேர்தலாகும். அதை மக்கள் அங்கிகரித்துள்ளனர். அதையிட்டு பெருமைப்படுகின்றேன்.எதிர்காலத்தில் சிறந்ததொரு அரசியல் காய் நகர்வை நகர்த்துவதற்கு திட்டமிட்டுள்ளேன்.

இதன் பிரகாரம் தமிழ் மக்கள் விடுதலைப் புலிகளின் கட்சிய்ன பிரதித் தலைவர் நா.திரவியம் (ஜெயம்) என்னுடன் பேச்சுவார்த்தை நடாத்தினார்.எதிர்வரும் கிழக்கு மாகான சபை தேர்தலில் எமது இரு கட்சிகம் இணைந்து செயற்படுவதற்கு உடன்பட்டுள்ளோம்.
ஏனெற்றால் தமிழ் தேசிய கூட்டமைப்பானது தமிழர்களின் வாக்குபெற்றுக்கொண்டு சகோதர இனத்தினை பலப்படுத்துவதில் அக்கறையாக உள்ளனர்.இவர்களுக்கு நல்லதொரு பாட்ம புகட்ட வேண்டும் என்றார்