நாடாளுமன்றில் சலசலப்பை ஏற்படுத்திய இரண்டு கோடி ரூபாய் சர்ச்சை!

அரசாங்கத்தின் வரவு செலவுத்திட்டத்திற்கு ஆதரவு வழங்க கூட்டமைப்பினர் 2 கோடி ரூபாய் இலஞ்சம் பெற்றதாக முன்வைக்கப்பட்ட குற்றச்சாட்டு குறித்து உரிய நடவடிக்கை எடுக்குமாறு கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சரவணபவன் வலியுறுத்தினார்.
இதனையடுத்து நாடாளுமன்ற உறுப்பினர் சரவணபவனின் சிறப்புரிமை பிரச்சினைக்கு சிவசக்தி ஆனந்தன் எம்.பி பதலளிக்க முனைந்ததால் நாடாளுமன்றில் சலசலப்பு ஏற்பட்டது.
நாடாளுமன்ற உறுப்பினர்களான சுமந்திரன், சரவணபவன் ஆகியோரது கடுமையான எதிர்ப்பினையும் மீறி சிவசக்தி உரையை தொடர்ந்தார்.
உரையை நிறுத்திக் கொள்ளுமாறு சபாநாயகரும் பலமுறை எச்சரித்தார். ஆனால், அதனையும் பொருட்படுத்தாத சிவசக்தி ஆனந்தனை, அமராவிட்டால் கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டி வரும் என்று சபாநாயகர் எச்சரித்தார். அதன்பின்னர் சிவசக்தி ஆனந்த எம்.பி தனது பதிலை இடைநடுவே நிறுத்தி விட்டு அமர்ந்தமை குறிப்பிடத்தக்கது.