முஸ்லிம் காங்கிரஸ் அம்பாறை மாவட்டத்தில் வீழ்ச்சி

பைஷல் இஸ்மாயில் - 

வீழ்ச்சியை நோக்கிய பயணமாக - SLMC இன் பயணம் அம்பாறை மாவட்டத்தில் காணப்படுகின்றது.
இந்தப் பயணம் தொடர்ந்தும், செல்லுமாக இருந்தால் மு.கா கட்சி என்ற ஒன்று இல்லாமல் மறைந்து செல்லக் கூடிய வாய்ப்பு மிக அதிக காணப்படுகின்றது.
கடந்த 2011 ஆம் ஆண்டு நடைபெற்ற உள்ளூராட்சி மன்ற தேர்தலின் அடிப்படையில் மு.கா கட்சி பெற்ற வாக்கு வீதத்தையும், 2018.02.10 ஆம் திகதி நடைபெற்ற உள்ளூராட்சி மன்ற தேர்தலின் வாக்கு வீதத்தின் முடிவுகளின் பிரகாரம் அம்பாறை மாவட்டத்தில் முஸ்லிம் காங்கிரஸ் கட்சியின் நிலைமை கடும் வீழ்ச்சியை நோக்கிய பயணமாக சென்று கொண்டிருப்பதை நாம் காணக் கூடியதாகவுள்ளது.
இது ஏன்? எதனால்? எதற்காக? வருகின்றது என்பதை கட்சியும், அதன் தலைமையும் இதுபற்றி நன்கு ஆராயவேண்டிய கட்டாய கடமைப்பாடான சூழ் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது.
இவ்வாறான நடவடிக்கையினை உடனடியாக மேற்கொள்ளத் தவறும் பட்சத்தில், மு.கா என்ற கட்சி எதிர்காலத்தில் ஒரு கேள்விக்குறியாகி விடுகின்ற நிலைமைக்கு தள்ளப்பட்டுவிடும் என்பதில் மாற்றுக் கருத்துக்கு இடமே இல்லை.
(2011 மற்றும் 2018 ஆண்டில் நடைபெற்ற உள்ளூராட்சி மன்ற தேர்தலில் மு.கா கட்சி பெற்றுக்கொண்ட வாக்கின் வீதம்)