85 வீத மருந்துகளை நாட்டிலேயே தயாரிக்க தீர்மானம்!

85 வீத மருந்து வகைகளை உள்நாட்டிலேயே தயாரிப்பதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என சுகாதார அமைச்சர் ராஜித சேனாரத்ன தெரிவித்துள்ளார்.

கொழும்பு நேற்று (ஞாயிற்றுக்கிழமை) இடம்பெற்ற நிகழ்வில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கையிலேயே அவர் இதனைக் குறிப்பிட்டார். இதன்போது அவர் மேலும் கூறுகையில்,

“சேனக பிபிலே மருந்தகக் கொள்கையை நடைமுறைப்படுத்தி நாட்டிற்குத் தேவையான மருந்து வகைகளில் 85 வீதத்தை நாட்டில் தயாரிப்பதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்படும். தற்போது அரசாங்க வைத்தியசாலைகளில் மருந்து வகைகளுக்கு தட்டுப்பாடு இல்லை. இதனால் நோயாளர்களுக்கு எந்தவித பாதிப்பும் ஏற்படாது.

வைத்தியர்கள் நோயாளிகளை பரிசீலனை செய்யும் போது ஆகக்குறைந்த ஒரு நோயாளிக்காக 10 நிமிடங்களை செலவிட்டு பரிசோதனைகளை மேற்கொள்ள வேண்டும். இதன் மூலம் வெளிநாட்டு செலாவணியை சேமிக்க முடியும். அத்துடன் தொழில்வாய்ப்புக்களை வழங்க முடியும்” என கூறினார்.