9 பாடசாலைகளுக்கு இடையே இடம்பெற்ற மேலைத்தேய வாத்திய இசை போட்டி : BATTLE OF THE BANDS

(கதிரவன்)

திருகோணமலை புனித சூசையப்பர் கல்லூரி  பழைய மாணவர் சங்கம் பாடசாலைகளுக்கு இடையே மேலைத்தேய வாத்திய இசை போட்டியினை நேற்று   சனிக்கிழமை 2018.03.10 நடத்தியது. இதில் 9 பாடசாலை அணிகள் பங்கு கொண்டன. இலங்கை இராணுவத்தின் 22வது படைப்பிரிவின் அனுசரணையில் புனித சூசைய்ர் கல்லூரி   மைதானத்தில் நடைபெற்றது. 

செல்வநாயகரம் இந்து மகா வித்தியாலயம், அபயபுரம் மகா வித்தியாலயம், மெதடிஸ்த பெண்கள் கல்லூரி, நாலந்தா மகா வித்தியாலயம், புனித மரியாள் கல்லூரி, அயபுரம் பெண்கள் உயர்தர பாடசாலை, புனித சூசையப்பர் கல்லூரி, ஸ்ரீ கோணேஸ்வரா இந்துக் கல்லூரி மிகுந்தபுரம் மகா வித்தியாயலயம் என்பன பங்கு கொண்ட பாடசாலைகளாகும்.


 காலை 10.00 மணிக்கு ஆரம்பித்த போட்டி மதியம் 1.30 மணிக்கு நிறைவடைந்தது. இதனைத் தொடர்ந்து முதல் 5 இடங்களைப் பெற்ற பாடசாலை அணிகளின் கண்காட்சி மதியம் 3.00 மணிக்கு ஆரம்பித்தது. அதனைத் தொடர்ந்து இராணுவத்திரின் நாய்களின் கண்காட்சியும், 22வது படைப்பிரிவினரின் வாத்திய கண்காட்சியும் நடைபெற்றது.

திருகோணமலை மாவட்ட கட்டளைத் தளபதி மேஜர் ஜெனரல் கே.பி.ஏ. ஜயசேகர பிரதம அதிதியாகவும், இராணுவ பாடசாலை தளபதி பிரிகேடியர் ஜி.ஏ.வன்னியாராச்சி, 221வது படைப்பிரிவு தளபதி பிரிகேடியர்  கே.பி.எஸ்.பிறேமலால் ஆகியோர் கௌரவ அதிதிகளாகவும் கலந்து கொண்டனர். கல்லூரியின் அதிபர் வணக்கத்திற்குரிய அல்பிரட் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் பழைய மாணவர் சங்கத்தின் போசகர் அதிவந்தனைக்குரிய கலாநிதி நோயல் இமாவல் அவர்கள் ஆசீர்வதித்தார்.
பெருமளவிலான பெற்றோர்கள். பாடசாலைகளின் பழைய மாணவர்கள், மாணவர்கள் பொது மக்கள் என புனித சூசையப்பர் கல்லூரி மைதானம் நிரம்பியிருந்தது.

இலங்கை கடற்படை இசை விற்பனர்கள் இப்போட்டியின் நடுவர்களாக கலந்து கொண்டிருந்தனர்.
முதலாம் இடத்தினை புனித சூசையப்பர் கல்லூரியும். இரண்டாம் இடத்தினை  கோணேஸ்வரா இந்துக் கல்லூரியும், மூன்றாம் இடத்தினை புனித மரியாள் கல்லூரி அணியினரும் பெற்றுக் கொண்டனர்.