இளைஞர் சமூகத்தை நெறிப்படுத்தக் கூடிய ஒரு சொத்தாகவே நாம் ஓய்வூதியம் பெறுகின்றவர்களை கருதுகின்றோம் : சத்தியகௌரி

(ரவிப்ரியா)

ஓய்வூதியம் பெறபவர்கள் தங்கள் உடல் ஆரோக்கியத்தில் மிக முக்கிய கவனம் செலுத்த வேண்டும். உங்கள் மனநிலையை சீராக பேணக் கூடியவாறும் உங்கள் ஆற்றல்கள் மங்கிப் போகாமல்மறுமலர்ச்சி பெறக் கூடியவாறு, வளர்த்தெடுப்பதிலம் கூடிய கவனம் செலுத்த வேண்டும். அதன்மூலம் சமூகத்திற்கான பங்களிப்புக்களை தொடர்ந்து மேற்கொள்ள வேண்டும்.

மேற்கண்டவாறு களுவாஞ்சிக்குடி இராசமாணிக்கம் மண்டபத்தில் செவ்வாயன்று (20) நடைபெற்ற களுவாஞ்சிக்குடி பிரதேச செயலக பிரிவுக்கான பகிரங்க சேவை ஓய்வூதியக்காரர்சங்கத்தின் 17வது வருடாந்த பொதுக் கூட்டம் அதன் தலைவர் க.துரைராஜா தலைமையில் நடைபெற்றபோது பிரதம அதிதி பிரதேச செயலாளர் திருமதி சிவப்பிரியா வில்வரெட்ணத்திற்குபதிலாகக் கலந்து கொண்டு பேசிய உதவிப் பிரதேச செயலாளர் திருமதி சத்தியகௌரி தெரிவித்தார். அவர் தொடாந்து பேசுகையில்.


ஓய்வு காலத்தின் பின் நீங்கள் மகிழ்ச்சிகரமாக இருக்க இத்தகைய சங்கங்கள் மூலம் பல்வேறு நிகழ்ச்சித் திட்டங்களையும் நலன்புரி நடவடிக்கைகளையும் நீங்களாகவே மேற்கொள்ளலாம்.

அதற்கு வேண்டிய நிதியை நீங்களாகவே உருவாக்கிக் கொள்ளலாம். உங்கள் சந்தாக்களை ஒரளவு அதிகரித்துக் கொள்வதன் மூலம் அது சாத்தியமாகும். அத்துடன் சமூக மேம்பாட்டுத்திட்டங்களையும் உங்கள் சங்கம் முன்னெடுத்தச் செல்லக் கூடியுதாக இருக்கும். இதற்கான நிதி இயலுமையை நீங்களாகவே உருவாக்கிக் கொள்ள முடியும்.

நீங்கள் இவ்வளவு காலமும் அரசசேவை மூலம் மக்களுக்கும், நாட்டுக்கும் அளப்பரிய சேவைகளை ஆற்றியுள்ளீர்கள். பல்வேறு வாழ்வாதார திட்டங்களை உங்களுக்காக நீங்களாகவேஉருவாக்கிக் கொள்ள முடியும். மருத்துவ முகாம்கள். வுpழிப்புணர்வு கருத்தரங்ககள் என்பவற்றை பயனுள்ள வகையில் நடாத்த முடியும்.

உங்கள் ஓய்;வுகாலத்திற்குப் பின்னரான காலம் மிக மகிழ்ச்சிகரமானதாக உங்களுக்கும் உங்களைச் சார்ந்தவர்களுக்கும். அனைத்துச் சமூகத்தினரும் பயன்பெற கூடிய வகையில் அமையலாம்.அதற்கான முயற்சிகளை நீங்கள் மேற்கொள்ள வேண்டும்.

ஓய்வீதியம் பெறும ;எல்லோருமே எமது பரம்பரைக்கு நல்லதையே சொல்லிக் கொடுக்கக் கூடிய பக்குவமும் ஆற்றலும் மிக்கவர்கள்;. இளைஞர் சமூகத்தை நெறிப்படுத்தக் கூடியபக்கவத்தை ஏற்படுத்தக் கூடிய ஒரு சொத்தாகவே நாம் ஓய்வூதியம் பெறுகின்றவர்களை கருதுகின்றோம். எனவே உங்கள் சேவையானது ஓய்வுதியதத்தோடு மட்டுப்படுத்தப்படவில்லைஎன்பதை உணர்ந்து கொள்ள வேண்டும். அது தொடர வேண்டும் எனக் கேட்டுக் கொண்டார்.

இந் நிகழ்வில் பிரதெச கணக்காளர் ஆர்.கார்த்திகேஸ். மட் மாவட்ட தலைவர் சொலமன் சப்பிரமணியம், முன்னாள் பிரதேச சங்க தலைவர் ஐ.சுப்பிரமணியம் மற்றும் சங்க பிரமுகர்களும்கலந்து கொண்டனர்.

இந் நிகழ்வின் போது. சங்கத்த்pன் பொருளாளர் வே.மு.கந்தசாமி; முன்னாள் தலைவா ஐ.சுப்பிரமணியம் ஜெ.பியினாலும் தற்போதைய உப செயலாளர் எஸ்.செல்வராசா. மூத்த உறுப்பினரும்; சித்த வைத்தியருமான கார்த்திகேசினாலும் அரங்கு நிறைந்த பலத்த கரகோசத்தின் மத்தியில் பொன்னாடை போர்த்தி கௌரவிக்கப்படடனர்.