தேற்றாத்தீவு பொதுநூலகம் பௌதீக வளப்பற்றாக்குறையுடன் காணப்படுகின்றது.

(-க.விஜயரெத்தினம்) 
மட்டக்களப்பு மாவட்டத்தின் களுதாவளை பிரதேசசபையின் நேரடியான கவனிப்பில் இயங்கும் தேற்றாத்தீவு பொதுநூலகத்தில் பௌதீகவளப்பற்றாக்குறையுடன் இயங்குவதாக பொதுமக்கள்,வாசகர்கள் கவலை தெரிவிக்கின்றார்கள்.நூலகத்தரப்படுத்தலில் மூன்றாம் நிலையில் காணப்படும் பொதுநூலகத்தில் மலசலக்கூடம், குடிநீர்வசதிகள்,இடவசதிகள்,சுற்றுமதில்பிரச்சனை,நூல்களை வைப்பதற்குரிய உபகரணங்கள் வசதிகள் இல்லாமல் காணப்படுவதாக வாசகர்கள் விசனம் தெரிவிக்கின்றார்கள்.



இன்றைய தகவல்தொழிநுட்ப யுகத்தில் வாழ்ந்துகொண்டிருக்கும் நாம் முழுமையான வசதிகளுடன் நூலகங்களை வைத்திருப்பதுதான் இலங்கையின் அரசாங்கத்தின் கொள்கையாகும்.இவ்நூலகத்தில் 3400க்கு மேற்பட்ட நூல்களும்,வாசகர்களின்நன்மைகருதி தினசரிப்பத்திரிகைகள்,சஞ்சிகைகள்,என்பனவற்றுடன் இயங்குகின்றது.இங்கு கடமையாற்றுகின்ற நூலக உத்தியோகஸ்தர்களுக்கு பாவிப்பதற்கு மலசலக்கூடம் இல்லாமல் ஊழியர்கள் கடும் கஸ்டத்தில் மத்தியில் அருகில் உள்ள பொதுமக்களின் மலசலகூடத்தை பயன்படுத்தி வருகின்றார்கள்.நூலக வளாகம் குப்பைகள் நிறைந்து காணப்படுகின்றது.களுதாவளை பிரதேசசபையில் தொழிலாளர்கள் இருந்தும் நூலகங்களை துப்பரவு செய்யாமல் தொழிலாளர்கள் செயற்படுகின்றார்கள்.இவ்நூலகத்திற்கு சுற்றுமதில் இல்லாமல் காணப்படுகின்றது.மின்சார வசதிகள் இருந்தும் முறையான மின்சாரகட்டமைப்புக்கள் இல்லாமல் காணப்படுகின்றது.




தேற்றாத்தீவு பொதுநூலகத்தின் பௌதீக வளப்பற்றாக்குறைகளை கிழக்கு மாகாண உள்ளுராட்சி ஆணையாளர், பிராந்திய உள்ளுராட்சி ஆணையாளர் போன்றோர்கள் நடவடிக்கை எடுத்து தேற்றாத்தீவு வாசகர்கள்,பொதுமக்களின் அறிவுப்பசிக்கு வித்திடவேண்டுமென எதிர்பார்கின்றார்கள்.