கல்வியியல் கல்லூரி – நேர்முகப்பரீட்சை இன்று ஆரம்பம்

கல்வியியல் கல்லூரிகளுக்கு மாணவர்களை சேர்த்துக் கொள்வதற்கான நேர்முகப் பரீட்சை இன்று ஆரம்பமாகும் என்று கல்வி அமைச்சு அறிவித்துள்ளது.

நேர்முகப் பரீட்சை கல்வியியல் கல்லூரிகள் மட்டத்தில் இடம்பெறுவதாக ஆசிரியர் கல்வி பிரதம ஆணையாளர் தெரிவித்தார்.

நேர்முகப்பரீட்சைக்கு மாவட்ட மட்டங்களில் நிலவும் வெற்றிடங்களுக்கு அமைவாக பரீட்சார்த்திகளுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. இம்முறை கல்வியியல் கல்லூரிகளுக்கு அனுமதி பெறுவதற்காக 32 ஆயிரம் பேர் விண்ணப்பத்திருந்தனர். இவர்களுள் 12 ஆயிரம் பேர் மாத்திரமே நேர்முகப்பரீட்சைக்கு அழைக்கப்பட்டுள்ளனர்.

இம்முறை 19 கல்வியியல் கல்லூரிகளுக்கு 4,745 மாணவர்கள் சேர்த்துக் கொள்ளப்பட உள்ளனர். பாடசாலை முதலாம் தவணை நிறைவடைவதுடன், கல்வியியல் கல்லூரிகளுக்கு மாணவர்கள் சேர்த்துக் கொள்ளப்படுவார்கள்.