குருக்கள்மடம் ஐயனார் ஆலயத்தின் அருகில் விஷமிகளால் வீட்டுக்கழிவுகள்,பொலீத்தின் கழிவுகள் வீசப்படுகின்றது

(-க.விஜயரெத்தினம்)
களுவாஞ்சிகுடி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட குருக்கள்மடம் ஐயனார் ஆலயத்தின் அருகில் விஷமிகளால் வீட்டுக்கழிவுகள்,பொலீத்தின் கழிவுகள் வீசப்படுகின்றது என பொதுமக்கள்,பாதசாரிகள்,ஆலய பரிபாலன சபையினர் கவலை தெரிவிக்கின்றார்கள்.

இப்பகுதி கல்முனை -மட்டக்களப்பு நெடுஞ்சாலை வீதியாக இருப்பதால் தினமும் பயணிக்கும் பாதசாரிகள்,பொதுமக்கள்,ஆலயத்தை தரிசிக்க வரும் அடியார்கள் இதனால் அசௌரியங்களுக்கு முகம்கொடுத்து வருகின்றார்கள்.ஆலயத்தின் அருகாமையில் கொட்டப்படும் கழிவுகளை காகங்கள்,நாய்கள் எடுத்துச்செல்வதால் கழிவுகளை ,தூக்கிச்செல்லும் போது அவை தூர்நாற்றத்துடன் பாதையில் பயணிப்போரின் தலையில் தவறுதலாக வீழ்வதால் தமது பயணத்தை சீராக மேற்கொள்ள முடியாதநிலைக்கு தள்ளப்படுகின்றனர்.தூர இடங்களுக்கு வியாபாரம் மேற்கொள்ள பயணிக்கும் சிறியரக வாகன உரிமையாளர்கள்,தங்களின் வீட்டுக்கழிவுகளையும்,வியாபாரத்தின் எஞ்சியுள்ள பொலீத்தீன் கழிவுகளையும் வீசிவிட்டு நல்லவர்கள்போல் பயணத்தை மேற்கொள்ளுகின்றனர்.


யாராகவிருந்தாலும் நாட்டில் வாழும் மூவின மக்களுக்கும் சட்டம்,நியாயம்,தீர்ப்பு எல்லாம் ஒன்றுதான்.படித்தவர்கள்,புத்திஜீவிகள்,சமுதாயத்தை கட்டியெழுப்புவர்கள் சுற்றுச்சூழலையும்,ஆலயத்தையும் சிறப்பாக பாதுகாக்க வேண்டும்.எல்லைப்பிரச்சனைக்கு தீர்வு குப்பைகளை மூடையில் பொதியிடப்பட்டு வீசுவதல்ல.ஆலயத்தையும்,சமயத்தையும்,சூழலையும் மதிக்கத்தெரியாத புத்தியற்றவர்கள் இருக்கும்வரை நாட்டில் உள்ள எந்தச்சமூகமும் உறுப்படாது என்பது திண்ணமாகும்.இங்குமட்டும் பிரச்சனையல்ல 

மட்டக்களப்பு மாவட்டத்தில் கண்மூடித்தனமாக மட்டக்களப்பு மாநகரப்குதி, புதுக்குடியிருப்பு,கிரான்குளம்,தாழங்குடா,துறைநீலாவணை பிரதானவீதி உட்பட பல இடங்களில் நீண்டகாலமாக வீசிவருகின்றார்கள்.இந்த குற்றச்செயல்களிலில் ஈடுபடுவோரை பிடித்து சட்ட நடவடிக்கை மேற்கொள்ளுவதற்கும்,அவ்வாறான சம்பவங்கள் இடம்பெறாமல் இருப்பதற்கும் மாவட்ட அபிவிருத்தி இணைத்தலைவர்கள்,மாவட்ட அரசாங்க அதிபர் கிழக்குமாகாண பிரதிப்பொலிஸ்மாதிபர்,பிராந்திய உள்ளுராட்சி உதவி ஆணையாளர் போன்றோர்கள் துரித நடவடிக்கை எடுக்கவேண்டும்.மட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ள சுற்றாடல் அதிகாரசபைகள்,சுற்றாடல் உத்தியோஸ்தர்கள்,மதத்தலைவர்கள்,அமைப்புக்களின் பிரதிநிதிகள் சுற்றுச்சூழழை பாதுகாப்பதில் விலகிநடப்பதால்தான் மாவட்டத்தில் சுற்றுச்சூழலில் குப்பைகள் வீசப்படுகின்றது.திருடனை பார்த்து திருந்தாவிட்டால் திருட்டை ஒழிக்கமுடியாது எனும் நிலையே மட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ளது என மக்கள் அங்கலாய்கின்றனர்.எனவே சுற்றுச்சூழலை பாதுகாப்பதிலும்,அதன் அழகை முறையாக பராமரிக்கமுடியாத சமூகமாக வாழ்வதில் என்ன பிரயோஜனம் ...? பொறுப்புவாய்ந்த அதிகாரிகளின் கவனக்குறைவால் குருக்கள்மடம் ஐயனார் ஆலயத்தில் குப்பைகள் வீசப்படுகின்றது.