மட்டக்களப்பு கல்வி அபிவிருத்திச் சங்கம் (EDS) சாதனையாளர் கௌரவிப்பு நிகழ்வு


(சசி)
மட்டக்களப்பு கல்வி அபிவிருத்திச் சங்கம்(EDS) தனதுகல்விமற்றும் சமூகப் பணிகளில் வெள்ளிவிழா ஆண்டைக் கடந்து நடாத்தும் சாதனையாளர் கௌரவிப்பு விழா (18.03.2018) மட்டக்களப்பு கல்லடி உப்போடையில் உள்ள 'சிவநேசராசாமண்டபத்தில்'  காலை 9.30 மணிக்கு ஆரம்பமாகி  நடைபெற்றது..

தரம் 05 புலமைப்பரிசில் பரீட்சை–2017, க.பொ.த(சா/த)–2016, க.பொ.த(உ/த) பரீட்சை–2017 என்பவற்றில் மாவட்டரீதியாகவும், பிரதேசரீதியாகவும் சிறந்தபெறுபேறுகளைபெற்ற 98 மாணவர்கள் சமய, இன வேறுபாடின்றி கௌரவிக்கப்பட்டனர். இவ்விழா 1994ம் ஆண்டுமுதல் ஆண்டுதோறும் நடாத்தப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது. இது வரை ஆயிரத்துக்கு மேற்பட்ட மாணவர்கள் கௌரவிக்கப்பட்டு உள்ளார்கள். உயர் பெறுபேறுகளைப் பெற்றமாணவர்களைக் கௌரவிப்பதுடன் கல்வி அபிவிருத்திச் சங்கத்தின் 2017ம் ஆண்டுக்கான சிறந்த பழையமாணவர் கௌரவம், இளம் கண்டுபிடிப்பாளர்கள், கலைச்சேவைக்கு பங்களிப்பு செய்தவர்களும் கௌரவிக்கப்பட்டனர்.

இந் நிகழ்வின் பிரதம அதிதிகளாக மட்டக்களப்பு மாவட்டபாராளுமன்ற உறுப்பினர்கள் கௌரவ ஞா.சிறிநேசன், கௌரவ ச.வியாழேந்திரன், கௌரவ சீ.யோகேஸ்வரன் ஆகியோருடன் சிறப்பு விருந்தினராக மாவட்ட அரசாங்க அதிபர் மா.உதயகுமார், கௌரவ விருந்தினராக வைத்திய கலாநிதி அ.இளங்குமரன் மற்றும் கிழக்கு மாகாண ஓய்வுபெற்ற காணி ஆணையாளர் க.குருநாதன் ஆகியோரும் கலந்து சிறப்பித்தனர். மேலும் மட்டக்களப்பு சிவானந்தா தேசிய பாடசாலை அதிபர் த.யசோதரன், விவேகானந்தா மகளிர்க் கல்லூரி அதிபர் திருமதி திலகவதி மற்றும், பாடசாலைகளினுடைய ஆசிரியர்கள், சமூகப் பெரியார்கள், மாணவர்கள், பழைய மாணவர்கள் மற்றும் பெற்றார்கள் எனப் பலரும் கலந்து கொண்டனர். நிகழ்வில் அதிதிகள் வரவேற்க்கப்பட்டதுடன், மங்கல விழக்கேற்றலுடன் நிகழ்வானகு ஆரம்பமானது.

வரவேற்பு உரையினை கல்விச்  அபிவிருத்திச் சங்கத்தின் தலைவர் நா.ஜோதிராஜா அவர்கள் ஆற்றியதுடன், அடுத்து வரவேற்பு நடனம் இடம்பெற்றது. அதனைத் தொடர்ந்து தலைமை உரையினை சங்கத்தின் ஸ்தாபகர் சி.தேவசிங்கன் அவர்கள் ஆற்றியதுடன், மாணவர்களுக்குப் பரிசுகள் வழங்குதல், மாணவர்களின் கலை நிகழ்ச்சிகள் என்பன இடம்பெற்றன. இதில் இனங்காணப்பட்ட தொழில்; முயற்சியாளர்களுக்கான உபகரணங்களும் வழங்கிவைக்கப்பட்டது. அடுத்து அதிதிகள் உரைகள் இடம்பெற்றதுடன் சங்கத்தின் பொருளாளர் ம.லச்சுதன் அவர்களின் நன்றியுரையுடன் நிகழ்வுகள் இனிது நிறைவடைந்தது.