போரதீவுப்பற்று பிரதேச செயலக பிரிவு 270 பயனாளிகளின் வீடுகளுக்கு அடிக்கல் நாட்டும் நிகழ்வு

(படுவான் எஸ்.நவா)
மட்டக்களப்பு போரதீவுப்பற்று பிரதேச செயலக பிரிவுக்குட்பட்ட விளாந்தோட்டம் பாலயடிவட்டை சுரவணையடியூற்று திக்கோடை வம்மியடியூற்று கிராமங்களைச் சேர்ந்த 270 பயனாளிகளின் வீடுகளுக்கு தேசிய வீடமைப்பு அபிவிருத்தி அதிகாரசபையினால் அடிக்கல் நாட்டும் நிகழ்வு (19) திங்கட்கிழமை; நடைபெற்றது.



பிரதேச செயலாளர் இ.ராகுலநாயகி அவர்களின் தலைமையில் நடைபெற்ற நிகழ்வில் பிரதம அதிதிகளாக கிராமிய பொருளாதார அபிவிருத்தி பிரதி அமைச்சர்  .அமிர்அலி    மட்டக்களப்பு மாவட்ட தேசிய வீடமைப்பு அபிவிருத்தி அதிகார சபையின் முகாமையாளர் கே.ஜெகநாதன் மற்றும் பிரதேச செயலக உதவி திட்டமிடல் பணிப்பாளர் தேசிய வீடமைப்பு அபிவிருத்தி அதிகார சபையின் பொறியியலாளர்கள் பொதுமக்கள் ஆகியோர்கள் கலந்து கொண்டனர்.



இதன்போது பிரதி அமைச்சர் தனது உரையில் நல்லாட்சி அரசாங்கத்திற்கு நாங்கள் எல்லோரும் வாக்களித்து கொண்டுவந்த இந்த அரசாங்கத்திலே இந்த வீடமைப்புத் திட்டமும் ஒன்றாகும். இதனை எல்லோருடைய மனதிலும் வைத்துக்கொள்ள வேண்டும் கடந்த காலத்தில் ஏற்பட்ட துன்பங்கள் துயரங்கள் கஷ்ரகள் எதிர் காலத்தில் எங்களுக்கு ஏற்படக்கூடாது. அதிலிருந்து விடுபட்டு சிறந்த வாழ்க்கை வாழவேண்டும். என்பதற்காக 270 வீடுகள் இந்த வருடம் இந்த பிரதேசத்தில் நன்மை பெற இருந்ததென்றால் இந்த நாட்டின் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இந்த நாட்டின் பிரதம மந்திரி ரணில்விக்ரமசிங்க இதற்குப் பொறுப்பாக இருக்கின்ற அமைச்சர் சஜித்பிரமதாச அவர்களுக்கு நாங்கள் நன்றி கூற கடமைப்பட்டவர்களாக இருக்கின்றோம். என உரையில் குறிப்பிட்டிருந்தார்.


 மேலும் அவர் கருத்து தெரிவிக்கையில்

ஜந்து இலச்சத்திற்கு இந்த வீடு கட்டமுடியாது அது எங்களுக்கும் தெரியும் உங்களுக்கும் தெரியும் எப்படியோ வீடு ஒன்று  கட்டத்தான் வேண்டும் எனவே நீங்கள் நம்பிக்கையோடு இருங்கள் இறைவனின் ஆசீர்வாதம் கிடைக்கும் பிள்ளைகளை நன்றாக படிக்கவையுங்கள் போதையற்ற சமூகமாக இருக்கவேண்டும் போதைக்கு அதிகமாக செலவு செய்கின்ற சமூகமாக இருக்கக்கூடாது முஸ்லிம் பிரதேசங்களில் பெரிய வீடுகள் காணப்படுகின்றது ஆனால் அவர்கள் போதைக்காக சாராயத்திற்காக செலவு செய்வது கிடையாது 98 வீதமானவாகள் போதை பாவிப்பதில்லை அதனை சேகரித்து பிள்ளைகளுக்கு வீடு கட்டுவது   திருமணம் செய்துவைப்பது  படிக்கவைப்பது போன்றவற்றை செய்கின்றார்கள்.

 ஆகவே நீங்கள் ஒவ்வொரு குடும்ப தலைவர்களும் சரியாக சிந்தித்து இதனை போதைக்கு செலவு செய்கின்ற பணத்தினை சேகரித்தால் அதனை பிரித்துப்பார்த்தால் இந்த வீட்டினை கட்டமுடியும் என தனது உரையில் தெரிவித்துகொண்டனர்