கிழக்கு மாகாண தமிழ் பிரதேச வைத்தியசாலைகளுக்கு நிதி ஒதுக்கப்படவில்லை ஆனால் முஸ்லிம் பகுதிகளில் அதிகளவான நிதியொதுக்கீடு


கிழக்கு மாகாணத்தின் முஸ்லிம் பகுதிகளில் உள்ள வைத்தியசாலைகளுக்கு அதிகளவான நிதியொதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாகவும், தமிழ் பிரதேசங்கள் புறக்கணிப்பட்டுள்ளதாகவும் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் கவீந்திரன் கோடீஸ்வரன் இன்று (வியாழக்கிழமை) நாடாளுமன்றில் குறிப்பிட்டார்.

கிழக்கு மாகாண தமிழ் பிரதேச  ஆதார வைத்தியசாலைகளான  திருக்கோவில், வாழைச்சேனை  இரண்டிற்கும் நிதி ஒதுக்கப்படவில்லை
ஆனால் நிந்தவூரில் ஏற்கனவே ஒரு வைத்தியசாலை இருந்தும் புதிதாக ஒரு வைத்தியசாலைக்கு 5000 மில்லியன் ரூபா நிதி ஒதுக்கப்பட்டுள்ளது , அதே போல் சம்மாந்துறைக்கு 1200 மில்லியன் ரூபா நிதி ஒதுக்கப்பட்டுள்ளது , பொத்துவில் , ஏறாவூர் வைத்தியசாலைக்கு நிதி ஒதுக்கப்பட்டுளள்து இது எந்த வகையில் நியாயம்  இப்படியான சம்பவங்களால் தான் இலங்கையில் இனவாதம் தலைதூக்குகிறது ஆகவே நிதி ஒதுக்கீடு சமமாக ஒதுக்கப்பட வேண்டும் 

120 வருட பழமை வாய்ந்த வைத்தியசாலையான திருக்கோவில் ஆதார வைத்தியசாலையில் கட்டிட வசதி , வைத்திய நிபுணர்கள் , தாதிமார் பற்றாக்குறையாக உள்ளது
யுத்த காலத்தில் பாதிக்கப்பட இந்த வைத்தியாசாலைக்கு நிதி ஒதுக்கப்படவேண்டும் என்று  நாடாளுமன்றில் குறிப்பிட்டார்.

இதற்கு பதிலளிக்கும் வகையில் மனோ கணேசன்

இக்கட்டான சூழ்நிலைகளின் போது, அரசாங்கத்திற்கு தமிழ் தேசியக் கூட்டமைப்பு ஆதரவு வழங்கியதென சுட்டிக்காட்டிய மனோ, பாதிக்கப்பட்ட மக்கள் தொடர்பாக அரசாங்கத்திடம் முறையிடுவதற்கான சந்தர்ப்பம் கூட்டமைப்பிற்கு அதிகமாக உள்ளதென குறிப்பிட்டார். கூட்டமைப்பு அதனை சரியாக பயன்படுத்திக்கொள்ள வேண்டுமென்றும் வலியுறுத்தினார்.

இதேவேளை, கோடீஸ்வரனின் குற்றச்சாட்டு தொடர்பாக அமைச்சரவையில் கலந்துரையாடுவதாகவும் மனோ கணேசன் உறுதியளித்தார்.