மட்டக்களப்பில் பொலிஸ் வீரர்களின் 154 ஆவது நினைவு தினம்

சட்டம் மற்றும் ஒழுங்கைப் பாதுகாப்பதற்காக உயர் நீத்த பொலிஸ் வீரர்களின் 154 ஆவது நினைவு தினம் இன்று (21) மட்டக்களப்பு சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகர் வளாகத்தில் நடைபெற்றது.


நாட்டைப் பாதுகாப்பதற்காக முதன் முதலாக சபான் என்கின்ற பொலிஸ் உத்தியோகத்தர் மொனராகலைப் பிரதேசத்தில் உயிரிழந்தார் எனவும் 1834 மார்ச் 21 முதல் இதுவரை 3118 பொலிசார் உயிரிழந்துள்ளதாக கிழக்கு மாகாண சிரேஷ;ட பிரதிப் பொலிஸ்; மா அதிபர் கபில ஜயசேகர தெரிவித்தார்.


நான்கு மதத் தலைவர்களின் முன்னிலையில் நடைபெற்ற இந்நிகழ்வில். மட்டக்களப்பு பிரதிப் பொலிஸ்; மா அதிபர் யாக்கொட ஆராய்ச்சி. சிரேஷ;ட பொலிஸ் அத்தியட்சகர் சி.ஸே. மென்டிஸ், மாவட்ட பொலிஸ் பொறுப்பதிகாரிகள். இறந்த பொலிஸ் வீரர்களின் உறவினர்கள் கலந்து கொண்ட இந்நிகழ்வில் பொலிசாரின் அணிவகுப்பு மரியாதை மற்றும் நினைவுத் தூபிக்கு மலர்ச் செண்டு வைத்து அஞ்சலி செலுத்தினர்.