லண்டன் லூசியம் சிவன் கோவிலின் சித்திரை புத்தாண்டு பூசை நிகழ்வு ! கிழக்கில் கல்வி பணிக்காக வருடத்திற்கு ஒரு கோடி பங்களிப்பு வழங்கும் ஆலயம் மற்றும் அறங்காவலர்கள்


லண்டன் லூசியம் சிவன் கோவிலில் சித்திரை புதுவருட பூசைகள் நேற்று  மூன்று நேரமும் மிகவும் சிறப்பாக இடம்பெற்றது .  இதில் சுமார் இரண்டாயிரம்  பக்தர்கள் கலந்துகொண்டனர்

இவ் ஆலயமும் இதனுடைய அறங்காவலர்களும்  பல்வேறு கல்வி பணிகளை பல வருடங்களாக கிழக்கு மாகாணத்தில்  முன்னெடுத்து வருகின்றனர் .
 இப் பண்ணிகாக இவ் ஆலயமும் இதனுடைய அறங்காவலர்கள் நால்வரும்  வருடம் ஒன்றிற்கு ஒரு கோடி ரூபாக்கு மேற்ப்பட்ட  நிதியை வழங்கி வருகின்றனர் .

லண்டன் லூசியம் சிவன்  ஆலயம் - 24 லட்சம் நிதி பங்களிப்பு
அறங்காவலர்கள் நால்வர்கள் - 80 லட்சம் நிதி பங்களிப்பு

லண்டன் சிவன் கோவில் மற்றும் அறங்காவலர்களால் கிழக்கு மாகாணத்தில்  மேற்கொள்ளப்படும்  கல்வி மற்றும் ஏனைய சமூக பணிகள் 

செட்டிபாளையம் சிவன் மகளீர்  இல்லம்  
- வருடம் ஒன்றிற்கு 16 லட்சம் ரூபா
 இல்லத்திலிருந்து  ஏழு மாணவிகள்  பல்கலைக்கழகங்களுக்கு தெரிவாகி   உயர் கல்வியை கற்கின்றனர் 
* பொருளாதார வசதி குறைந்த  உயர் தர மாணவர்களுக்கான உதவிகள்      கடந்து ஐந்து வருடங்களாக இத்திட்டம் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது  ,
 25 மாணவர்களுக்காக   வருடத்திற்கு  30லட்சம் ரூபா செலவழிக்கப்படுகின்றது  .   
கடந்த மூன்று வருடங்களில் இதனூடாக  மருத்துவ துறைக்கு ஒரு மாணவியும் ,     பொறியியல் துறைக்கு நான்கு மாணவர்களும்   , சட்டத்துறைக்கு  ஒருவரும்  , ஏனைய துறைகளில் ஏழு  மாணவர்களும் பல்கலைக்கழகங்களில்  கல்வியை தொடர்கின்றனர் 
*  பல்கலைக்கழகம் சென்ற மாணவர்களுக்கு உதவிகள்
56 மாணவர்கள்  ( மருத்துவம் - 10 , பொறியியல் 25 , சட்டம் 14 , ஏனையதுறை 7 )
இவர்களது கற்கை நெறி முடியும் வரை மாதாந்த கொடுப்பனவாக 5000 - 8000 வரை வழங்கப்படுகின்றது
இதற்கு  வருடம் ஒன்றிற்கு 36 இலட்சம் ரூபா  நிதி உதவி வழங்கப்படுகிறது. 

பின்தங்கிய கஷ்ட  பிரதேசங்களில் சாதாரண தர மாண்வர்களுக்கான பிரத்தியோக வகுப்பு   நிலையங்கள் .  

கல்வி நிலையங்கள் 

  1. ஈச்சிலம்பற்று ( திருகோணமலை )
  2. இலங்கைத்துறை ( திருகோணமலை )    
  3. தாண்டியடி  ( திருக்கோவில் - அம்பாறை   ) 
  4. வாகரை  பால்சேனை ( மட்டக்களப்பு )
  5. மண்டூர் சங்கர்புரம்  (மட்டக்களப்பு ) 
  6. தும்பங்கேணி  (மட்டக்களப்பு ) 
  7. பாலையடிவேட்டை   (மட்டக்களப்பு ) 
இதன் மூலம்  900 மாணவர்கள் பயனடைகிறார்கள் இதற்காக வருடம் ஒன்றிற்கு  28 லட்சம் ரூபா செலவழிக்கப்படுகின்றது .

இதே போன்று கிழக்கில்  சில  புலம்பெயர் அமைப்புகளும் , மக்களும் இப்படியான  பணிகளை செய்து வருகின்றனர் .
மேலும்  மற்றைய புலம்பெயர் அமைப்புகளும்  மற்றும்  மக்களும்   இது போன்ற பணிகளில் ஈடுபடும் பட்சத்தில் கிழக்கு மாகாணத்தில் அவலப்படும் தமிழ் மக்களின் வாழ்க்கையில்   துரித முன்னேற்றத்தை கொண்டு வரலாம் .