செட்டிபாளையம் ஸ்ரீலஸ்ரீ கண்ணகிஅம்மன் ஆலய மஹா கும்பாபிசேக விஞ்ஞாபனம்


(ரவிப்ரியா)                                                         
கிழக்கில் பிரசித்திபெற்ற கிரான்குளம், குருக்கள்மடம், செட்டிபாளையம், மாங்காடு, தேற்றாத்தீவு களுதாவளை ஆகிய ஆறு கிராம மக்களினால் நிர்வகிக்கப்படும் பழம்பெரும் ஆலயமான செட்டிபாளையம் ஸ்ரீலஸ்ரீ கண்ணகி அம்மன் ஆலய மஹா கும்பாபிசேக விஞ்ஞாபனம் எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை காலை 9 மணிமுதல் அரம்பமாகி   ஆரம்ப கிரியைகளைத் தொடர்ந்து 11.15மணி வரையிலான சுப முகூர்த்தத்தில் மஹா கும்பாபிசேகம் நடைபெறும்.

சனிக்கிழமை (21) பக்தர்கள் எண்ணெய்காப்பு சாத்தும் நிகழ்வ காலை 6.00 மணி முதல் மாலை 7.00மணிவரை இடம்பெறும்.

இலங்கை முதலாவது இந்து மத குருபீடாதிபதி சிவாகமணி அருள்ஜோதி சிவப் பிரம்ம ஸ்ரீ  ஜ்கந்த சாம்பசிவாச்சாரியார் நவாலியூர் பிரதிஸ்டா சிரோண்மணி பிரம்ம ஸ்ரீ சாமி விஸ்வநாதக்குருக்கள், சங்கானை முருகமூர்த்தி தேவஸ்தான ஆதீன குரு முதல்வர் கலாநிதி சிவபிரம்ம ஸ்ரீ சிவ நித்தியானந்த சிவாச்சாரியார்,

நியாய சிரோமணி பிரம்மஸ்ரீ கி.சிவசுப்பிரமணிய சாஸ்திரிகள் ஆகியோரின் விண்ணுலக குருவருள் ஆசியடன், பிரதிஸ்டா பிரதம சிவாச்சாரியார் சர்வதேச இந்துமத குருபீடாதிபதி சபரிமலைக் குருமுதல்வர், சிவாகம கலாநிதி ஆன்மீக அருள் ஜோதி ஸ்ரீ ஐயப்பதாஸ சாம்பசிவ சிவாச்சாரியார் ஜே.பி. தலைமையில் கும்பாபிசேகம் நடைபெறும்.

கும்பாபிசேகத்தைத் தொடர்ந்து அரை மண்டலாபிசேகம் நடைபெற்று இறுதி நாளன்று சங்காபிசேகம் நடைபெறும்.