காணாமல் போனோர் தொடர்பான அலுவலகத்தில் வேலை வாய்ப்பு

காணாமல் போனோர் தொடர்பான அலுவலகத்தை இயங்கச் செய்யும் வகையில், அதன் பதவி வெற்றிடங்களுக்கு விண்ணப்பங்கள் கோரப்படுகின்றன.

இந்த அலுவலகத்தில் பணிப்பாளர், உதவிப் பணிப்பாளர், நிர்வாக உத்தியோகத்தர், ஊடக உத்தியோகத்தர், மொழிப் பெயர்ப்பாளர், ஆய்வு உத்தியோகத்தர், முகாமைத்துவ உதவியாளர்கள்,தரவு உள்ளீட்டாளர்கள், அலுவலக உதவியாளர்கள்,சாரதிகள் போன்ற பதவி வெற்றிடங்கள் நிலவுகின்றன.

இதற்கான விண்ணப்பங்களை எதிர்வரும் 26ஆம் திகதிக்கு முன்னர் கிடைக்கக்கூடியவாறு காணாமல் போனோர் தொடர்பான அலுவலகத்திற்கு பதிவுத் தபால் மூலம் அனுப்பி வைக்க வேண்டும்.


இதன் முகவரி, இலக்கம் 37, நாரஹென்பிட்டி, நாவல என்பதாகும்.