ஆரையம்பதி இளம்தென்றல் விளையாட்டுக் கழகத்தின் தமிழர் சித்திரை கிராமிய விளையாட்டுப் போட்டியும் கலாச்சார நிகழ்வும்


சித்திரைப்புத்தாண்டை சிறப்பிக்கும் வகையில் ஆரையம்பதி வடக்கு கிராம சேவையாளர் பிரிவில் செயற்பட்டு வருகின்ற இளம்தென்றல் விளையாட்டுக் கழகம், காந்தி இளைஞர் கழகம், பாரதி சனசமூக நிலையம் ஆகிய இணைந்து நேற்றைய தினம் (15.04.2018) மாபெரும் தமிழ் சித்திரை கிராமிய விளையாட்டு போட்டியினையும், கலாச்சார நிகழ்வினையும் ஆரையம்பதி ஸ்ரீ பேச்சியம்மன் ஆலய முன்றலில் மிகச்சிறப்பாக நடாத்தியிருந்தனர். இவ் விழாவில் பல பாரம்பரிய விளையாட்டுக்கள் மிகச்சிறப்பாக சுவாரஸ்யமான முறையில் இடம்பெற்றமை குறிப்பிடத்தக்கது.

இவ் நிகழ்வில் பிரதம அதிதியாக கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் சதாசிவம் வியாழேந்திரன் அவர்கள், விசேட அதிதியாக பிரபல வணிகக்கல்வி ஆசான் K.K அரஸ் ஆசிரியர் பிரபல அளவியல் ஆசிரியர் V. நிருசன் அவர்கள், மாவட்ட வைத்தியசாலைப் பொறுப்பதிகாரிDR. S.F அல்மெடா அவர்கள், மண்முனைப் பிரதேசசபை உள்ளுராட்சிமன்ற உறுப்பினர் தோ. சுரேந்தர் அவர்கள், கௌரவ விருந்தினர்களாக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலை தாதிய சங்கத்தலைவர்  பூ.புஸ்பராஜா அவர்கள், ஸ்ரீ பேச்சியம்மன் ஆலய பிரதம பூசகர் திரு. பூ.மகேந்திரராஜா அவர்கள் கிராம சேவகர், ஆலய பரிபாலன சபை உறுப்பினர்கள், ஆலய குருக்கள் ஆகியோர் கலந்து சிறப்பித்திருந்தனர்.