ஒலுவில் துறைமுகத்தில் மீனவர்கள் எதிர்நோக்கும் பெரும் பிரச்சினை


ஒலுவில் துறைமுகத்தில் படகுகள் வந்து போகும் முகப்புப் பகுதியில் மண் மேடு உள்ளமையினால், மீனவர்கள் தமது தொழில் நடவடிக்கைகளை முன்னெடுப்பதில் பாரிய பிரச்சினைகளை தொடர்ந்தும் எதிர்நோக்கி வருகின்றனர்.

குறித்த துறைமுகத்தில் மீன்பிடித் துறைமுகம் மற்றும் வர்த்தகத் துறைமுகம் ஆகிய இரண்டு பிரிவுகள் அமைந்துள்ளன. மேற்படி பிரச்சினையால் இரண்டு துறைமுகங்களிலும் மீனவர்கள் தமது தொழிலை மேற்கொள்வதில் பாரிய சிரமங்களை எதிர்நோக்கி வருகின்றனர்.

கப்பல்கள் தரித்து நிற்பதற்கான அமைப்புடன் நிர்மாணிக்கப்பட்டுள்ள வர்த்தகத் துறைமுகத்தில், படகுகள் தரித்து நிற்பதிலும் படகுகளிலிருந்து மீன்களை தரைக்கு இறக்குவதிலும் பாரிய சிரமங்களை மீனவர்கள் எதிர்நோக்கி வருவதாகவும் கூறப்படுகின்றது.

துறைமுகத்தின் போக்குவரத்துப் பாதையினை சீர்செய்யும் நடவடிக்கைகளை அரசாங்கம் முன்னர் மேற்கொண்டிருந்தபோதும் எதிர்காலத்தில் இது போன்ற பிரச்சினை ஏற்படாத வகையில் நிரந்தரத் தீர்வொன்றினை தமக்குப் பெற்றுத் தருமாறு இங்குள்ள கடற்றொழிலாளர்கள் கோரிக்கை விடுக்கின்றனர்.