கட்டாக்காலி மாடுகளை முறையாக கட்டிப் பராமரிக்குமாறு ஒலிபெருக்கி மூலம் அறிவிப்பு.



(க.விஜயரெத்தினம்)


மண்முனை தென் எருவில் பற்று பிரதேச சபைக்குட்பட்ட கிராமங்களில் கட்டாக்காலி மாடுகளை முறையாக கட்டி பராமரிக்குமாறு ஒலிபெருக்கி மூலம் இன்று(18.4.2018)  குருக்கள்மடம் கிராமம் முதல் துறைநீலாவணை வரையும் அறிவித்தல் விடுக்கப்பட்டுள்ளது.இதனை மண்முனை தென் எருவில்பற்று பிரதேச சபைத்தவிசாளர் ஞானமுத்து -யோகநாதன் அவர்கள் தகவலை தெரிவித்ததாக அறிவிக்கப்பட்டுள்ளது.



இது சம்பந்தமாக மேலும் குறிப்பிடுகையில்:-தற்போது எமது பிரதேச சபைக்குட்பட்ட நெடுஞ்சாலை வீதிகளிலும்,பிரதான வீதிகளிலும் கட்டாக்காலிமாடுகள் முறையாக கட்டி பராமரிக்கப்படாமல் இருப்பதனால் விபத்துக்கள் ஏற்பட்டு பல அசௌரியங்களுக்கு முகம்கொடுத்திருப்பதை பிரதேச அவதானிக்கலாம்.இதனால் காயங்களும்,மரணங்களும் ஏற்பட்டுக்கொண்டிருக்கின்றது.இதனை கட்டுப்படுத்துவதற்கு பிரதேச சபைத்தவிசாளர்,உறுப்பினர்கள் தீர்மானிக்கப்பட்டுள்ளது.கட்டாக்காலிமாடுகள் சம்பந்தமாக உரிமையாளர்கள் தங்களின் எல்லைக்களுக்குள் முறையாக கட்டிப்பராமரிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.

இதனை முறையாக கட்டிப்பராமரிக்க முடியாதவர்களுக்கு எதிராக அவர்களின் கட்டாக்காலி மாடுகளை பொலிசாருடனும்,பிரதேச சபை ஊழியர்களின் உதவியுடன் பிடித்து சட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்படவுள்ளது.