வெல்லாவெளி போரதீவுப்பற்று பிரதேச சித்திரை கலாசார விழையாட்டு விழா


(படுவான் எஸ்.நவா)
போரதீவுப்பற்று பிரதேச செயலகமும் கிழக்கு மாகாண விளையாடுட்டுத் திணைக்களமும் இணைந்து நடாத்தப்பட்ட கிராம சேவகப் பிரிவுகளுக்கிடையிலான விளையாட்டு விழாவும் கலாச்சார விளையாட்டு விழாவும்

போரதீவூப்பற்று பிரதேச செயலகம் நடாத்திய கிராம சேவகப் பிரிவுகளுக்கிடையிலான விளையாட்டு விழாவும் கலாச்சார விளையாட்டு விழாவும் (17) கோயில்போரதீவு பொது விளையாட்டு மைதானத்தின் பிரதேச செயலாளர் ஆர். ராகுலநாயகி அவர்களின் தலைமையில் நடைபெற்றது.

இதன் போது இப்பிரதேசத்தின் கலை கலாச்சார பாரம்பரிய விழுமியங்களை விட்டு செல்ல கூடாது என்பதற்கான பாரம்பரிய வீடுகள் அமைத்து அதற்குள் இருக்கக் கூடிய சகல வசதிகளையும் கொண்ட போர்கலப்பை, மீன்பிடிப்பதற்கான கரப்பு, வலை, தொட்டில், கொட்டு, மரக்கால் மற்றும் பாரம்பரிய உணவுப் பண்டங்களான அப்பவகை, பிட்டு வகை, பலகார வகைகள் போன்றவை காணப்பட்டது.

இப்பிரதேசத்தின் புராதன தொழில்களாகக் கொண்டுள்ள விவசாயம், மந்தைவளர்ப்பு, செங்கல் உற்பத்தி, மீன்பிடி போன்ற தொழில்களாகும். இப்பிரதேசத்தின் பொருளாதார வளர்ச்சிக்கு இக்கிராம மக்களின் பங்களிப்பு மிகசிறந்தது விளையாட்டுக்களில் கிளித்தட்டு, கபடி, கிட்டிப்புல், மட்டைப்பந்து என்பதனையும் இங்கு குறிப்பிடப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

இதன் போது அரசாங்க அதிபர் தனது உரையின் போது இவ்விளையாட்டு மைதானத்தில் அதி கூடிய பார்வையாளர்களும், உத்தியோகத்தர்களும் மற்றும் கழகங்கள் கலந்து கொள்வது வெகுவாகப் பாராட்டுகின்றேன். எதிர்வருகின்ற காலங்களில் மாவட்ட விளையாட்டு விழா மட்டக்களப்பு நகரில் நடாத்துவதற்கு எண்ணிருக்கின்றோம்.

இப்பகுதியில் மிக சிறந்த வீரர்கள் இருக்கின்றார்கள் 4x100, 4x400 போன்ற போட்டிகளில் பங்குபற்றிய ஏழு குழுக்களும் ஒன்றுக்கொன்று விட்டக்கொடுக்காமல் அவர்களின் திறமைகளை வெளிக்காட்டியிருந்தார்கள் மாவட்ட செயலகத்தினால் நடாத்தப்படுகின்ற இவ்வாண்டுக்கான விளையாட்டு விழாவில் ஆகக்குறைந்தது 16 வீரர்களாவது தேசிய மட்டத்திற்கு அனுப்ப வேண்டும்.

எனவே இப்பிரதேசத்தில் மிக சிறந்த வீரர்கள் இருக்கின்றார்கள் அவர்களை மாவட்ட மட்டத்தில் கலந்து கொள்ள வேண்டும் என வினையமாகக் கேட்டுக்கொள்கின்றேன்

எமது இனம் தொலைத்துவிட்ட கலை கலாச்சார பாரம்பரியங்களையும், உணவுப் பழக்க வழக்கங்களையும் கொண்டு செல்வதற்காக உதயதாரகை கலைக்கழகமும், பழுகாமம் பாஞ்சாலி கலைக்கழகமும, கோவில்போரதீவு இளைஞர் எழுச்சி ஒன்றியம் என்பன அமைக்கப்பட்ட  வீடுகளையும்

அங்குள்ள பாரம்பரிய முறைகளையும் பார்க்கின்றபோது  இப்பிரதேசத்தினுடைய வாழ்வியல் முறைகளை வெளிக்காட்டியிருக்கின்றார்கள் என்பதனை வெகுவாகப்பாராட்டுகின்றேன். என கூறி தனது உரையினை நிறைவு செய்தார்

இந்நிகழ்வின் போது பிரதம அதிதியாக மாவட்ட அரசாங்க அதிபரும் மாவட்ட செயலாளர் திரு.மா.உதயகுமார், கௌரவ அதிதிகளாக சுகாதார வைத்திய அதிகாரி திரு.வீ.குணராசசேகரம்,  மாவட்ட விளையாட்டு உத்தியோகத்தர் திரு.வீ.ஈஸ்வரன், வெல்லாவெளி பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி AAA.N.டயஸ், களுவாஞ்சிகுடி பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி M.G.U.L.குணவர்த்தன மற்றும் திணைக்களத் அதிகாரிகள் உத்தியோக்கதர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டது குறிப்பிடத்தக்கது.