மட்டக்களப்பில் வேலையற்ற பட்டதாரிகளுக்கு தொழில் வழங்குவதற்கான நேர்முகத் தேர்வு

பட்டப்படிப்பை நிறைவு செய்த பட்டதாரிகளை மாவட்ட செயலகங்களில் பதிவு செய்துகொள்ளுமாறு அரசாங்கம் அறிவித்துள்ளது.

இதேவேளை, வேலையற்ற பட்டதாரிகளுக்கு தொழில் வழங்குவதற்கான நேர்முகத் தேர்வு இன்றும் நடைபெற்றது.

நேற்று (16) ஆரம்பமான இந்த நேர்முகத் தேர்வு எதிர்வரும் சில தினம் வரை மாவட்ட செயலகங்களில் இடம்பெறவுள்ளன.

கடந்த ஆகஸ்ட் மாதம் வெளியான அறிவித்தலுக்கு அமைய, விண்ணப்பித்த வேலையற்ற பட்டதாரிகளுக்கான நேர்முகத் தேர்வு நடைபெற்று வருகிறது.

அரச பணிகளுக்காக 52,000 பட்டதாரிகள் தமது அமைச்சில் பதிவு செய்துள்ளதாக தேசிய கொள்கைகள் மற்றும் பொருளாதார அலுவல்கள் அமைச்சு தெரிவித்தது.

இதுவரை பதிவு செய்யாத பட்டதாரிகள் மாவட்ட செயலகங்களுக்கு சென்று பதிவு செய்துகொள்ளுமாறு அமைச்சின் செயலாளர் அசலங்க தயாரத்ன கூறினார்.

நேர்முகப் பரீட்சையின் ஒரு பகுதியாக இன்று மட்டக்களப்பு மாவட்ட பட்டதாரிகளுக்கு மட்டக்களப்பு கச்சேரியில் நேர்முகத் தேர்வு நடைபெற்றது.
பிரதேச செயலகப் பிரிவின் அடிப்படையில் கட்டம் கட்டமாகப் பிரிக்கப்பட்டு இத் தேர்வு நடைபெற்றுக் கொண்டிருக்கின்றது.

இன்று தேர்வுக்கு வருகை தந்த பட்டதாரிகளின் ஒரு பகுதியினரை படங்களில் காணலாம்.

http://www.battinews.com/2018/04/blog-post_222.html
நேர்முகப்பரீட்சைக்கு அழைக்கப்படாத பட்டதாரிகள் எவ்வித குழப்பமும் அடையத் தேவையில்லை