பிரிட்டிஸ் கவுன்சில் அரசியல் பிரிவு உயர்ஸ்த்தானிகர் மட்டக்களப்பு மாநகர சபைக்கு விஜயம்


[யதார்த்தன்]

பிரிட்டிஸ் கவுன்சில் அரசியல் பிரிவு உயர்ஸ்த்தானிகர்  நீல் கவனாஹ் அவர்கள் மட்டக்களப்பு மாநகர சபைக்கு உத்தியோகபூர்வ வியமொன்றினை மேற்கொண்டிருந்த போது மாநகர முதல்வர் தியாகராஜா சரவணபவன் மற்றும் மாநகர ஆணையாளர் என்.மணிவண்ணன் ஆகியோரைச் சந்தித்து மட்டக்களப்பு மாவட்டத்தில் மேற்கொள்ளப்பட வேண்டிய   அபிவிருத்தி  விடயங்கள்  தொடர்பாக கலந்துரையாடினர் .

மேலும் இதன்போது  நிர்வாக உத்தியோகத்தர் ரோகினி விக்கினேஸ்வரன் மற்றும் பிரதி ஆணையாளர் என்.தனஞ்சயன் ஆகியோரும் கலந்து கொண்டனர் .