களுதாவளை சுயம்புலிங்க பிள்ளையார் ஆலயத்தில் விளம்பி வருடப் பிறப்பு விசேட திருவிழா

 ரவிப்ரியா

கிழக்கில் பிரசித்திபெற்ற தொன்மைமிக அலயமாம் சுயம்பலிங்க பிள்ளையார் ஆலயத்தில் விளம்பி வருட பிறப்பைமுன்னிட்டு சனி காலை பெத்தாக்கிழவி குடும்பம் சார்பாக ஆலய தலைவர் காசிப்பிள்ளை வேலாயதபிள்ளைதலைமையில், 1008 வருடாந்த சங்காபிசேகத்தை ஆலய பிரதம குரு பிரதிஸ்டா திலகம், வாமதேவ சிவச்சாரியார்,கிரியாகலாமணி சு.க விநாயகமூர்த்தி உதவிக்குரு சடாட்சர சர்மா சகிதம் நடாத்தவைத்தார். அதனைத் தொடர்ந்து மதியபூஜை, வசந்த மண்டப பூஜை என்பன சிறப்பாக நடைபெற்று சுவாமி, பக்தர்கள் புடைசூழ உள்வீதி வலம் வந்தது.


ஆலய மண்டபத்துள் சுமாமியை தரிசிக்க மக்கள் கூட்டம் அலைமோதியது. மாவட்டத்தின் நாலா பக்கங்களிலிருந்தும்சுயம்பலிங்க பிள்ளைiயாரை வருடப்பிறப்பில் ஆசிபெறவும் கைவிசேடம் பெறவும் தவறாமல் தரிசிக்க வருவதுஇவ்வாலயத்தின் தனிச் சிறப்பாகும். அத்தகைய பக்தி ஈர்ப்பை சுயம்பலிங்கபிள்ளையார் தனது அபூர்வ சக்தியால்ஏற்படுத்திவைத்துள்ளார்.

இவ்வாலயத்தினால் கைவிசேடமாக ஆலய பிரதம குருவினால்; ஆசீர்வதித்து வழங்கப்படும் நாணய குற்றி அபூர்வ சக்திகொண்டதெனவும். வருடம் முழுக்க அது தங்கள் பொருளாதார விருத்திக்கு உதவுவதாகவும் அதை உறுதிசெய்வதாகவும் தரிசிக்க வந்த பக்ததர்கள் நம்பிக்கை தெரிவித்தனர்.

இது வசதி பேதமின்றி எல்லாதரப்பினரையும் வசீகரிக்கவே செய்கின்றது. கைவிசேட நாணயம் சுயம்பலிங்கபிள்ளையாரின் வரம்போல் பெறுமதிமிக்கதாக பக்தர்களால் பாதுகாக்கப்பட்டு வருகின்றது.

எனவேதான் பக்தர்கள் பொறுமையாக   வரிசையில் நின்று இந்த கைவிசேடத்தை பெற்றுச் செல்வதில் ஆர்வமாகஇருக்கின்றனர். அதேபோல் ஆலய நிர்வாகமும் வருகை தரம் பக்தர்கள் அனைவருக்கும் ஆலய பிரதம குருவினால்நேரடியாக ஆசீர்வதிக்கப்பட்ட நாணயத்தை வெற்றிலையில் வைத்து ஒவ்வொருவருக்கும் வழங்கும் ஏற்பாட்டைசெய்துள்ளமையானது வரவேற்கத்தக்கது.

ஆலய நிhவாகம் அனைத்து நடவடிக்கைகளிலும் விசேட சிரத்தை எடுத்து கட்டுக்கோப்புடன் செயற்படுவதுபாராட்டுககுரியது.

ஆலய பிரதமகுருவம், அலய தலைவரும் புத்தாண்டு வாழ்த்துக்களையும் ஆசீர்வாதத்தையம் வழங்கி வைத்தனர்.