பலத்த பொலிஸ் பாதுகாப்புடன் இடம்பெற்ற அன்னை பூபதியின் நினைவுதினம்

மட்டக்களப்பு நாவலடியில் அமைந்திருக்கம் அன்னை பூபதியின் சமாதியில்; 30 ம் ஆண்டு நினைவு தினம் இன்று  வியாழக்கிழமை 19 திகதி பலத்த பொலிஸ்  பாதுகாப்புடன் அவரின் சகோதரி கண்ணமுத்து பிள்ளையம்மா பிள்ளைகள்  ஈகைச்சுடர் ஏற்றி  அனுஷ;டித்தனர்

நினைவு தூபியில் அரசியல் கட்சிகளே அல்லது அமைப்புக்களே நினைவு தின நிகழ்வுகள் நடாத்த அனுமதிக்க முடியாது. என அன்னை பூபதியின் பிள்ளைகள் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு தெரிவித்தனர்

இந்த நிலையில்  இந்த நிகழ்வை அனனை பூபதியின் பிள்ளைகள் மற்றும் பொதுமக்கள் இணைந்து ஏற்பாட்டையடுத்து காலை 9.00 மணிக்கு புபதியம்மாவின் சகோதரி கண்ணமுத்து பிள்ளையம்மா அன்னையிய் திருவுருவபடத்திற்கு மலர்மாலை அணிவித்து ஈகைச்சுடரை ஏற்றினார்

இதனைத் தொடர்ந்து அவரின் பிள்ளைகள் உறவினர்கள் மற்றும் தமிழ் தேசிய மக்கள் முன்னணி மட்டு இணைப்பாளர் த.சுரேஸ் மட்டு மாநகர சபை மேஜர் சரவணபவான், ஜக்கிய தேசிய கட்சி மட் முhவட்ட இணைப்பாளர் வே.மகேஸ்வரன் அரசியல் கட்சியினர்கள்  பொதுமக்கள்கள் மலர்மாலை அணிவித்து ஈகைச்சுடர் ஏற்றி 2 நிமிட மௌன அஞ்சலி செலுத்தினர்

இந்த நிகழ்வை புகைப்படம் மற்றும் வீடியோக்களை எடுப்பதற்கு ஊடகவியளாளர்களைத் தவிர ஏனையோருக்கு தடைவிதிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது