அபாயா விவகாரம் ! திருகோணமலை இந்து மகளீர் கல்லூரி அதிபரை மிரட்டிய முஸ்லிம் ஆசிரியைகளின் கணவர்மாருக்கு எதிராக ஆர்ப்பாட்டம்

(கதிரவன்  )

திருகோணமலை  சண்முக இந்து மகளீர் கல்லூரி அதிபரை மிரட்டிய முஸ்லிம் ஆசிரியைகளின்; கணவர்மாருக்கு எதிர்ப்பு தெரிவித்தும், பாடசாலையின் கலாசாரத்துக்கு புறம்பாக ஆசிரியைகள் ஆடை அணிவதற்கு எதிர்ப்பு தெரிவித்தும் பழைய மாணவிகளும் பெற்றோர்களும் கண்டன போராட்டம் ஒன்றினை இன்று 2018.4.25 காலை மேற்கொண்டர். இதனால் பாடசாலை கற்பித்தல் நடவடிக்கைகள் பாதிக்கப்பட்டது.

வழமையாக சேலை அணிந்து வரும் ஆசிரியைகள் 5பேர் திங்கட்கிழமை திடீர் என அபாயா உடை அணிந்து வந்ததால் கல்லூரியில் பிசுபிசுப்பு ஏற்பட்டது. கடந்த ஞாயிற்றுக்கிழமை  அவர்களின் கணவர்மார் கல்லூரிக்கு வந்து அதிபரிடம் இனிமேல் எமது மனைவிகள் அபாயா அணிந்தே வருவார்கள் எனவும், இதனை நீங்கள் அனுமதிக்க வேண்டும் என கண்டிப்புடன் கூறிச்சென்றிருந்தனர்.



ஆசிரியைகளிதும், அவர்களினது கணவர்களது நடவடிக்கையால் அதிருப்தி அடைந்த பழைய மாணவிகளும் பெற்றோர்களும் எதிர்ப்பு தெரிவித்து கண்ட போராட்டத்தை நடத்தினர் காலை 6.30 மணிக்கு கல்லூரிக்கு முன் கூடிய இவர்கள் பல்வேறு பதாதைகளை தாங்கி தமது எதிர்ப்பினை தெரிவித்தனர்.   நிலைமையை கட்டுப்படுத்த பொலிசாரும் குவிக்கப்பட்டு இருந்தனர்.

அமைதியான முறையில் நின்றிருந்த போராட்டகாரர்கள் பல்வேறு கோசங்களை எழுப்பினர். அவ்விடத்திற்கு வந்த திருகோணமலை தலைமையக பொலிஸ் பொறுப்திகாரி உங்கள் கோரிக்கைகளை அதிபரிடம் சென்று சம்ர்பிக்குமாறும் , கற்பித்தல்  நடவடிக்கைகளுக்கு குந்தகம் ஏற்படாதவாறு நடந்து கொள்ளுமாறும் கேட்டுக் கொண்டார்.

இதனைத் தொர்ந்து பெற்றோர்கள் ழைய மாணவிகள் பிரதிநிதிகள் அதிபரிடம் சென்று தமது கோரிக்கைகளை முன்வைத்தனர்;. இதற்கு அதிபர் தர் இது விடயமாக வலய கல்வி பணிமனைக்கு தெரிவித்துள்ளதாகவும். அவர்களது பதிலை எதிர்கொண்டு இருப்தாகவும் தெரிவித்தார்.

கல்வி அதிகாரிகள் இவ்விடத்திற்கு வந்து இப் பிரச்னையை தடுக்க  வேண்டும் என  போராட்டத்தில் ஈடுட்டவர்கள் தெரிவித்து தொடர்ந்து ஈடுட்பட்டனர். பின்னர் திருகோணமலை வலய கல்வி பணிப்பாளரும்  அவரது அதிகாரிகளும்,  மேலதிக மாகாண கல்வி  பணிப்பாளர் அவரது அதிகாரிகளும். திருகோணமலை சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகர். கபில கடு;பிட்டி ஆகியோர் ஸ்தலத்திற்கு வந்து கல்லூரி அதிபர் அலுவலகத்தி;ல் போராட்டத்தில் ஈடுட்டவர்களின் பிரதிநிதிகளுடன் கலந்துரையாடலில் ஈடுபட்டனர்.
இதன் போது வியாழக்கிழமை சம்பந்த்பட்ட ஆசிரியைகளை அழைத்து மாகாண கல்வி திணைக்ளத்தில்  சந்திப்பினை மேற்கொள்வது எனவும், செவ்வாய்கிழமை இதற்கான தீர்வு காணப்படும் எனவும தெரிவிக்கப்பட்டதைத் தொடர்ந்து போராட்டம் கைவிடப்பட்டது.

செவ்வாய்கிழமை முஸ்லிம் ஆசிரியைகளது உடை ற்றிய சரியான தீர்வு கிடைக்காத பட்சத்தில்  தாம் மீண்டும் போராடடத்தில்   ஈடுபடவேண்டி வரும் என  பெற்றோர்களும் பழைய மாணவிகளும் அதிகாரிகளிடமும் பொலிசாரிடமும் தெரிவித்து கலைந்து சென்றனர்.

இப்போராட்டம் காரணமாக வித்தியாலயம் வீதியில் கல்லூரிக்கு முன்பாக வாகன போக்குவரத்து 2 மணி நேரத்திற்கு மேலாக தடைப்பட்டு இருந்தது.