கோலாகலமாக நடைபெற்ற இங்கிலாந்து இளவரசர் ஹரி - மெகன் மார்கில் திருமணம்


இங்கிலாந்து இளவரசர் ஹாரி - அமெரிக்க நடிகை மேகன் மார்கில் திருமணம், இன்று கோலாகலமாக லண்டனிலுள்ள வின்ட்சார் கோட்டையில் நடைபெற்றது.


இங்கிலாந்து இளவரசர் சார்லஸ், டயானா தம்பதியின் இரண்டாவது மகன் ஹாரி தனது தோழியும், காதலியுமான அமெரிக்க நடிகை மெக்கன் மார்கலை திருமணம் செய்ய உள்ளதாக கடந்த ஆண்டு அரசக் குடும்பம் அறிவித்தது. இதனைத் தொடர்ந்து அவர்களது திருமணம் மே மாதம் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டது.