அக்கரைப்பற்று தொழில்நுட்பக்கல்லூரியில் புதிய கற்கை நெறிகள் அறிமுகம்

எதிர்வரும் யூலை மாதம் ஏழு புதிய கற்கை நெறிகள் ஆரம்பிக்கப்பட உள்ளதாக கல்லூரியின் புதிய அதிபர் ச.தியாகராசா தெரிவித்தார். தொழில்நுட்ப்பக் கல்லூரிக்கே உரித்தான கற்கைநெறிகள்
மிகக்குறைவாகவே அக்கரைப்பற்று தொழில்நுட்பக்கல்லூரியில் காணப்பட்டது. இக் குறைபாட்டை நிவர்த்தி செய்யும் வகையில் புதிய ஏழு தேசிய தொழில் தகைமை கொண்ட கற்கை நெறிகள் ஆரம்பிக்கப்பட உள்ளதாகவும். இதற்கான அனுமதி தொழில்நுட்ப பயிற்சித் திணைக்களத்தில் பெற்றுக் கொண்டுள்ளதாகவும் கல்லூரியின் அதிபர் தெரிவித்தார்.

அலுமினியம் பொருத்துதலில் தேசிய சான்றிதழ். இது தேசிய தொழில் தகைமை மட்டம் மூன்று. மோட்ட சைக்கில் திருத்துனர். இது தேசிய தொழில் தகைமை மட்டம் நான்கைக் கொண்டது. இவை இரண்டையும் கற்பதற்குஓன்பதாம் வகுப்பு படித்திருத்தல் வேண்டும்.இதைப் போல் விவசாய கள உதவியாளர். இது தேசிய தொழில் தகைமை மட்டம் நான்கு வழங்கப்படும். வன் கணணி தொழில்நுட்பம். இது தேசிய தொழில் தகைமை மட்டம்நான்கு.மின்னியலாளர் இது தேசிய தொழில் தகைமை மட்டம் நான்கு. இவை மூன்றையும் கற்பதற்கு க.பொ.த சாதாரண தரத்தில் இரண்டு அமர்வுகளில் ஆறு பாடங்கள் சித்தியடைந்திருத்தல் வேண்டும்.மேற் கூறிய கற்கை நெறிகள் ஆறுமாத காலத்தினைக் கொண்டதாகும். இவற்றுடன் மூன்று மாத காலத்தினைக் கொண்ட நீர்குளாய் பொருத்துனர் கற்கை நெறி தேசிய தொழில் தகைமை மட்டம் மூன்றாகும். இதற்கு ஓன்பதாம் வகுப்பு படித்திருத்தல் வேண்டும்.

தொழில் செய்பவர்களில் ஆங்கில மொழியாற்றலையும்ரூபவ்அவர்களது தகைமையினையும் அதிகரிக்கும் வகையில் ஆறு மாத காலாத்தினைக் கொண்ட உயர் தொழில் திறன் ((Advance Career Skill) ஆங்கில கற்கைநெறி பகுதி நேரமாக ஆரம்பிக்கப்பட உள்ளது. இது தேசிய தொழில் தகைமை மட்டம் நான்கைக் கொண்டுள்ளது.

இவற்றுடன் தற்போது நடாத்திக் கொண்டிருக்கும் உதவி கணிய அளவையியல் கற்கைநெறி மற்றும் தகவல் கணணி தொழில்நுட்பம். இவை இரண்டும் தேசிய தொழில் தகைமை மட்டம் நான்கைக் கொண்டுள்ளது. மேற்கூறிய கற்கை நெறிகள் அனைத்தும் எதிவரும் யூலை மாதம் ஆரம்பிக்கப்பட உள்ளது. எனவே ஒன்பது கற்கைநெறிக்குமான மாணவர்கள் உடனடியாக சேர்த்துக் கொள்ளப்பட உள்ளார்கள். இக் கற்கைநெறிகளைப் பயில விரும்பும் மாணவர்கள் அக்கரைப்பற்று தொழில்நுட்பக்கல்லூரியில் உள்ள தொழில் வழிகாட்டல் பிரிவில் விண்ணப்பப் பத்திரத்தினைப் பெற்று பூரணப்படுத்திக் கொள்ளுமாறு கல்லூரியின் அதிபர் ச.தியாகராசா வேண்டிக் கொண்டுள்ளார்.


இக் கற்கைநெறிகளைப் பயிலும் மாணவர்களுக்கு மாதாந்தம் ஆயிரம் ரூயஅp;பா உதவிக் கொடுப்பனவு அரசினால் வழங்கப்படுவதுடன்ரூபவ்அரை மானியத்துடனான பருவகால பயணச் சீட்டும் வழங்கப்படும்.அத்துடன் இதற்கான ஆறுமாதகால வேலைத்தள பயிற்சியும்ரூபவ்உள்நாட்டு வெளிநாட்டு வேலை வாய்ப்பு தொடர்புகளும் ஏற்படுத்திக் கொடுக்கப்படும் என கல்லூரியின் அதிபர் மேலும் தெரிவித்தார்.